இன்றெல்லாம் அனைவரிடமுமே ஒரு வங்கி கணக்காவது இருக்கிறது. கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் வங்கி கணக்குகளில் சேமித்து வைக்கின்றனர். இன்னும் சிலர் பிக்சட் டெபாசிட் செய்கின்றனர். அப்படி வங்கிகளில் நாம் சேமித்து வைக்கும் பணம் எதிர்கால தேவைக்காகவும், அவசர காலத்திற்காகவும் பயன்படுகிறது. ஆனால் சில நேரங்களில் வங்கிகள் திவாலாகிவிடும் என்ற அபாயமும் உண்டு. இத்தகைய சூழலில் நமது சேமிப்பு என்னவாகும்? என்ற கவலை அனைவரையும் தொற்றிக் கொள்ளும்.
முன்பெல்லாம் வங்கி திவாலானால் டெபாசிட் செய்யப்பட்ட தொகை அனைத்தும் கிடைக்காது என்ற பயம் இருந்தது. ஆனால் இது தொடர்பாக மத்திய அரசு தற்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் அல்லது பிக்சட் டெபாசிட்டில் இருக்கும் பணம் வங்கி திவாலானாலும் கூட பாதுகாப்பாக இருக்கும்.

வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்யப்படுவதற்கு காப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த ரூ.5 லட்சத்தை ரூ. 8 முதல் ரூ. 12 லட்சமாக அதிகரிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்த மாற்றம் பிப்ரவரி இறுதிக்குள் வரலாம் என்றும் கூறப்படுகிறது. ஒருவர் பிக்சட் டெபாசிட்டில் ரூ. 10 லட்சம் முதலீடு செய்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஏதோ ஒரு காரணத்தினால் ஒருவர் டெபாசிட் செய்த வங்கி தீடீரென மூடப்பட்டால் அதற்கு காப்பீடாக ரூ.5 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
மீதமுள்ள ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தவருக்கு இழப்புதான். நீங்கள் எவ்வளவு முதலீடு செய்திருந்தாலும் ரூ. 5 லட்சம் தான் வரம்பு. அதேபோல ஒருவர் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் வங்கி மூடப்பட்டவுடன் அந்த ரூ.2 லட்சம் அப்படியே வழங்கப்படும். இதற்காகத்தான் பட்ஜெட்டுக்குப் பிறகு காப்பீட்டு வரம்பை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பைனான்சியல் சர்வீசஸ் செகரட்டரி எம்.நாகராஜன் தெரிவித்திருக்கிறார்.
ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஒழுங்கற்ற முறையில் செயல்படும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், ஸ்ரீராம் பைனான்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் மட்டுமின்றி ஆர்பிஐ-யின் விதிமுறைகளுக்கு இணங்காத வங்கிகளின் லைசென்ஸ்-ஐயும் ஆர்பிஐ ரத்து செய்து வருகிறது.
இதனால் சில வங்கிகள் மூடப்படுகின்றன. அதற்காகத்தான் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் தொகைகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த காப்பீட்டை டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன் (DICGC) வழங்குகிறது. இது வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்டுக்கு காப்பீட்டை வழங்குவதற்காக ஆர்பிஐ கொண்டுவரப்பட்ட சொந்தமான துணை நிறுவனமாகும்.
ஒருவேளை DICGC-இன் கீழ் வழங்கப்படும் டெபாசிட் தொகை நீட்டிக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் இன்னும் நம்பிக்கையுடன் தங்கள் பணத்தை டெபாசிட் செய்வார்கள். இது குறித்து அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications