கொரோனா வைரஸ் தொற்று, லாக்டவுன் அறிவிப்பால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து மீண்டு வர மத்திய அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்திருந்த நிலையில், இந்தியச் சந்தை பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி 2020ஆம் ஆண்டில் மட்டும் ரெப்போ விகிதத்தில் 115 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ளது.
இந்நிலையில் இன்று நடந்து முடிந்த இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் நாட்டின் வளர்ச்சிக்கு போதுமான தளர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ள காரணத்தால் ரிசர்வ் வங்கி எவ்விதமான வட்டி விகிதத்தையும் மாற்றம் செய்யவில்லை.
ரெப்போ விகிதம்
இதன் மூலம் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எவ்விதமான மாற்றமும் செய்யாமல் 4 சதவீத வட்டி விகிதம் தொடரும் என அறிவித்துள்ளார். இதேபோல் ரிசர்வ் வங்கியின் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவே அடுத்த இரண்டு மாதங்களுக்கும் தொடரும் என இன்று தெரிவித்துள்ளார்.
ரெப்போ விகிதம், ரிவர்ஸ் ரெப்போ விகிதம்
ரெப்போ விகிதம் என்பது வர்த்தக வங்கிகள் (தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள்) தனக்கான நிதி தேவையைப் பூர்த்தி செய்ய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதம் தான் இந்த ரெப்போ விகிதம். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என்றால் ரிசர்வ் வங்கிக்கு நிதி தேவை ஏற்படும் போது வர்த்தக வங்கிகளிடம் இருந்தும் பெறும் போது விதிக்கப்படும் வரி விதிப்பு.
தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள்
இந்நிலையில் இந்தியாவில் செயல்படும் தனியார் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை அடிப்படையாக வைத்துத் தான் வங்கியின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கிறது.
வைப்பு நிதி
தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் எவ்விதமான வட்டி உயர்வை அறிவிக்காத நிலையில், வங்கியின் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு இல்லை. வங்கி வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வருமானத்தை முக்கியமானதாகக் கொண்டிருக்கும் இருக்கும் பல கோடி பேருக்கு ரிசர்வ் வங்கியின் முடிவு பெரிய பின்னடைவாக உள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications