வங்கிகளின் மாத விடுமுறை நாட்களைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். தடையின்றி வங்கி சேவைகளைப் பெறுவதற்கு இது போன்ற நாட்களை கருத்தில் கொள்ள வேண்டும். பிற ஊர்களில் இருந்து மற்றொரு ஊருக்கு வங்கி சேவை பெற செல்பவர்கள் அதற்கு ஏற்ப தங்களுடைய வருகையை திட்டமிடுவது அவசியம். விடுமுறை நாட்களையும் மறந்து விட்டு வங்கிகளுக்கு சென்று பலர் வீடு திரும்பிய கதைகள் உண்டு.
வருகின்ற டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளது இவை வார விடுமுறை மற்றும் பொது விடுமுறை என அனைத்தையும் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் டிசம்பர் மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறது. வங்கி ஊழியர்களுக்கு 6 நாட்கள் வழக்கமான விடுமுறைக்கு பதிலாக 7 நாட்கள் வார விடுமுறை வழங்கப்படவுள்ளது.

பொதுவாக வங்கிகளுக்கு RBI காலண்டரின்படி தான் விடுமுறைகள் வழங்கப்படும். ஆனால் இந்த 17 நாட்களும் தொடர் விடுமுறையாக இருக்காது. இருந்தாலும் உடனடியாக வங்கி சேவை பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு டிசம்பர் மாத விடுமுறை நாட்கள் சற்று சிக்கலானதாக இருக்கலாம். ஆனால் விடுமுறை நாட்களிலும் நீங்கள் தொடர்ந்து வங்கியின் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் அப்ளிகேஷன்கள் மற்றும் ஏடிஎம்-களைப் பயன்படுத்தலாம். நகை மீட்பது, நகை அடமானம் வைப்பது போன்ற சேவைகளை மட்டுமே பெற முடியாது.
டிசம்பர் 2024-இல் வங்கி விடுமுறைகளின் முழு பட்டியல்:
டிசம்பர் 1: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாராந்திர விடுமுறை.
டிசம்பர் 3: செவ்வாய்கிழமை அன்று புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (பிராந்திய விடுமுறை)
டிசம்பர் 8: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாராந்திர விடுமுறை.
டிசம்பர் 12: வியாழக்கிழமை அன்று பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா காரணமாக ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
டிசம்பர் 14: இரண்டாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.
டிசம்பர் 15: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாராந்திர விடுமுறை.
டிசம்பர் 18: புதன்கிழமை அன்று யு சோசோ தாமின் நினைவு தினத்தை முன்னிட்டு ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை.
டிசம்பர் 19: வியாழக்கிழமை அன்று கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு கோவாவில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை.
டிசம்பர் 22: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாராந்திர விடுமுறை.
டிசம்பர் 24: செவ்வாய்கிழமை அன்று கிறிஸ்மஸ் ஈவ் அன்று ஐஸ்வால், கோஹிமாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
டிசம்பர் 25: புதன்கிழமை அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை. தேசிய விடுமுறை என்பதால் அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
டிசம்பர் 26: வியாழக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முன்னிட்டு சில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
டிசம்பர் 27: வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முன்னிட்டு சில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
டிசம்பர் 28: நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை
டிசம்பர் 29: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாராந்திர விடுமுறை.
டிசம்பர் 30: திங்கட்கிழமை அன்று U Kiang Nangbah காரணமாக ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
டிசம்பர் 31: செவ்வாய்கிழமை அன்று புத்தாண்டு ஈவ் காரணமாக சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications