ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலின் படி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் இந்த மாதம் இந்தியாவில் அனைத்து பகுதிகளையும் சேர்ந்து வார இறுதி நாட்களை உடன் சுமார் 13 நாட்கள் மூடப்பட உள்ளது.
எந்த நாளில் வங்கி விடுமுறை
இதனால் மக்கள் எந்த நாளில் வங்கி விடுமுறை என்பதைத் தெரிந்துகொண்டு வங்கி பணிகளைத் திட்டமிடுங்கள். டிஜிட்டல் வங்கி சேவைகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தால் மக்கள் வங்கிக்குச் செல்ல வேண்டிய தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது.
வங்கி செல்வது முக்கியம்
ஆனாலும் கடன் சேவை, பெரிய தொகையை வித்டிரா செய்ய வேண்டும் என்பது போன்ற பல சேவைகளுக்கு இன்னுமும் மக்கள் வங்கிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளதால் விடுமுறை நாட்களைத் தெரிந்துகொண்டு முன்கூட்டியே திட்டமிட்டு வங்கி பணிகளை முடித்துக்கொள்வது உத்தமம்.
கிறிஸ்துமஸ் பண்டிகை
டிசம்பர் மாதம் நாட்டு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் போது வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்கள் அனைத்தும் பிராந்திய அடிப்படையிலான விடுமுறைகள் மட்டுமே என்பதால் நாடு முழுவதும் வங்கி சேவை முடங்கும் நிலை இல்லை.
தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் தேதி மட்டுமே விடுமுறை.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்கள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. மாநில வாரியான விடுமுறை, மதம் சார்ந்த விடுமுறைகள் மற்றும் பண்டிகை விடுமுறைகள். இதில் கிறிஸ்துமஸ் போன்ற முக்கியமான பண்டிகைக்கு நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது, மற்ற பெரும்பாலான விடுமுறைகள் மாநில வாரியான விடுமுறைகள் தான்.
விடுமுறை நாட்கள்
டிசம்பர் 3: புனித பிரான்சிஸ் சேவியரின் விழா - கோவா
டிசம்பர் 18: U SoSo Tham மறைவு நாள்- ஷில்லாங்
டிசம்பர் 24: கிறிஸ்துமஸ் ஈவ் - ஐஸ்வால், ஷில்லாங்
டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் (இந்தியா முழுவதும் விடுமுறை)
டிசம்பர் 27: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - ஐஸ்வால்,
டிசம்பர் 30: U Kiang Nangbah - ஷில்லாங்
டிசம்பர் 31: புத்தாண்டு விழா - ஐஸ்வால்
டிசம்பர் 5: ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 11: மாதத்தின் 2வது சனிக்கிழமை
டிசம்பர் 12: ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 19: ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 25: மாதத்தின் 4வது சனிக்கிழமை மற்றும் கிறிஸ்துமஸ்
டிசம்பர் 26: ஞாயிற்றுக்கிழமை
வருமான வரி
வருடத்தின் இறுதி மாதத்திற்கு வந்து விட்ட நிலையில் வருமான வரி தாக்கல் செய்யும் இறுதி நாளும் நெருங்கியுள்ளது. ஒருபக்கம் மக்கள் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வரும் இதே வேளையில் வருமான விரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் வேளையிலும் உள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications