12 நாட்கள் வங்கி விடுமுறையா.. தமிழகத்தில் எத்தனை நாள்.. !

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், வங்கிகளிலும் பல வித கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன.

அதோடு கடந்த வாரத்தில் வங்கி நேரமும் குறைக்கப்பட்டது. எனினும் ஏப்ரல் 30 வரையில் மட்டுமே குறைக்கப்பட்டிருந்த நிலையில், இது தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையில் இந்தியாவில் மே மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை, தமிழகத்தில் எத்தனை நாள் வாருங்கள் பார்க்கலாம்.

வங்கிகளுக்கு பொது விடுமுறை

வங்கிகளுக்கு பொது விடுமுறை

நாடு முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுகிழமையன்று வங்கிகளுக்கு விடுமுறை. இது தவிர இரண்டாவது சனிகிழமை மற்றும் நான்காவது சனிகிழமையன்று விடுமுறை. இது தவிர மற்ற பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கும் விடுமுறை தான். எனினும் மாநிலங்களுக்கு மாநிலம் சில விடுமுறை நாட்கள் வேறுபடுகிறது. இதனால் மாநில விடுமுறைகளையும் சேர்த்தால், விடுமுறை காலத்தில் மாற்றம் இருக்கலாம்.

உதவியாக இருக்கும்

உதவியாக இருக்கும்

ஆக தேசிய விடுமுறைகள் என்னென்ன? மற்ற விடுமுறைகள் என்ன? என்பதை தெரிந்து வைத்துக் கொண்டால், இது உங்களது வங்கி பரிவர்த்தனைக்கு உதவிகரமாக இருக்கும். ஏனெனில் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படலாம். அதிலும் இந்த கொரோனா காலகட்டத்தில் பலவித கட்டுப்பாடுகள் நிலவி வருவதால், இது மிக பயனுள்ளதாக இருக்கும்.

மே விடுமுறைகள்

மே விடுமுறைகள்

1 மே, 2021 சனிக்கிழமை - தொழிலாளர் தினம்
2 மே, 2021 ஞாயிற்றுகிழமை

7 மே 2021 வெள்ளிக்கிழமை - ஜமாத் உல்-விதா * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
8, மே 2021 இரண்டாவது சனிக்கிழமை
9, மே 2021 ஞாயிற்றுகிழமை
13, மே 2021 வியாழக்கிழமை - ரம்ஜான் ஐடி / ஈத்-உல்- ஃபிதார் * அரசு விடுமுறை
14, மே 2021 வெள்ளிக்கிழமை - பகவான் ஸ்ரீ பர்சுராம் ஜெயந்தி/ ரம்ஜான் EId/ பசவ ஜெயந்தி/ அக்சய திருதி
16, மே 2021 ஞாயிற்றுகிழமை
22, மே 2021, நான்காவது சனிக்கிழமை
23, மே 2021 ஞாயிற்றுக்கிழமை
26, மே 2021 புதன்கிழமை புத்த பூர்ணிமா / வெசக் * ரெஸ்ட்ரிக்டெட்
30, மே 2021 ஞாயிற்றுக்கிழமை

தமிழகத்தில் எத்தனை நாட்கள்

தமிழகத்தில் எத்தனை நாட்கள்

1 மே, 2021 சனிக்கிழமை - தொழிலாளர் தினம்
2 மே, 2021 ஞாயிற்றுக்கிழமை

8, மே 2021 இரண்டாவது சனிக்கிழமை
9, மே 2021 ஞாயிற்றுக்கிழமை
14, மே 2021 வெள்ளிக்கிழமை - பகவான் ஸ்ரீ பர்சுராம் ஜெயந்தி/ ரம்ஜான் EId/ பசவ ஜெயந்தி/ அட்சய திருதி
16, மே 2021 ஞாயிற்றுக்கிழமை
22, மே 2021, நான்காவது சனிக்கிழமை
23, மே 2021 ஞாயிற்றுக்கிழமை
30, மே 2021 ஞாயிற்றுக்கிழமை

திட்டமிட்டு செயல்படுங்கள்

திட்டமிட்டு செயல்படுங்கள்

தமிழகத்தில் 9 நாட்கள் இந்த மாதம் விடுமுறைகள் உள்ளது. ஏற்கனவே கொரோனாவின் காரணமாக வங்கிகளில் பல கட்டுப்பாடுகள் நிலவி வருவதால், மக்கள் முன் கூட்டியே வங்கி வேலைகளை திட்டமிடலாம். முடிந்த அளவு, டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தலாம். அப்படியே வங்கிகளுக்கு சென்றாலும், மாஸ்க், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+