ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 7 நாள் விடுமுறை - முழு விபரம்..!

ஏப்ரல் 2023, புதிய நிதியாண்டின் முதல் மாதம் வங்கிகள் முதல் அனைத்து நிதி அமைப்புகளுக்கும் மிகவும் பிசியான காலக்கட்டமாக இருந்தாலும், ஏப்ரல் மாதத்தில் முதல் வாரத்திலேயே இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் பல நாட்கள் மூடப்பட உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏப்ரல் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம் 3 ஆம் தேதி துவங்கி 9ஆம் வரையில் நடக்க உள்ளது. ஏப்ரல் 1, 2 சனி மற்றும் ஞாயிறு.

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் அதாவது 1 முதல் 9 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 7 நாள் விடுமுறை. இக்காலக்கட்டத்தில் ஆன்லைன் வங்கி சேவைகள் எப்போதும் போலவே செயல்படும்.

வங்கி விடுமுறை

வங்கி விடுமுறை

இந்த வாரம் வங்கி தொடர்பான முக்கியமான பணிகளுக்காக, நீங்கள் உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்ல விரும்பினால், ஏப்ரல் முதல் வாரத்தில், ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 9 வரை, பல்வேறு நகரங்களில் கிளைகள் மூடப்படும் நாட்களை தெரிந்துக்கொண்டு செயல்படுங்கள்.

 ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறை காலண்டர் பட்டியலின்படி ஏப்ரல் மாதத்தில் வீக்எண்ட் விடுமுறை நாட்களையும் சேர்த்து மொத்தம் 16 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். மேலும் விடுமுறை நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும். தமிழ்நாடு விடுமுறை பட்டியல் தனியாக கடைசியில் சேர்க்கப்பட்டு உள்ளது.

முதல் வார விடுமுறை

முதல் வார விடுமுறை

ஏப்ரல் 1, 2023 - வருடாந்திர வங்கிகள் கணக்குகள் மூடப்படுவதால் ஏப்ரல் 1ஆம் தேதி வங்கிகள் மூடப்படும். ஐஸ்வால், ஷில்லாங், சிம்லா மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் வங்கிகள் திறந்திருக்கும்.

ஏப்ரல் 2, 2023 - ஞாயிற்றுக்கிழமை

ஏப்ரல் 3, 2023 - மகாவீர் ஜெயந்தி (போப்பால், ஜெய்பூர் ஆகிய நகரங்களில் வங்கிகள் மூடப்படும்)

ஏப்ரல் 4, 2023 - மகாவீர் ஜெயந்தி (அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூர், போபால், சண்டிகர், சென்னை, ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்ப்பூர், ராஞ்சியில் வங்கிகள் மூடப்படும்).

ஏப்ரல் 5, 2023 - ஜக்ஜீவன் ராம் ஜெயந்தி (ஹைதராபாத்தில் வங்கி மூடப்படும்)

ஏப்ரல் 7, 2023 - புனித வெள்ளி (அகர்தலா, அகமதாபாத், கவுகாத்தி, ஜெய்ப்பூர், ஜம்மு, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் தவிர இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்படும்).

ஏப்ரல் 7, 2023 - 2வது சனிக்கிழமை

ஏப்ரல் 9, 2023 - ஞாயிற்றுக்கிழமை

பிற முக்கிய விடுமுறை

பிற முக்கிய விடுமுறை

ஏப்ரல் 14, 2023 - அம்பேத்கர் ஜெயந்தி

ஏப்ரல் 15, 2023 - விஷூ

ஏப்ரல் 18, 2023 - ஷப்-ல்-கதர் (ஜம்மு, ஸ்ரீநகர்)

ஏப்ரல் 21, 22 2023 - ரமலான் / ரம்ஜான்

தமிழ்நாடு வங்கி முறை

தமிழ்நாடு வங்கி முறை

ஏப்ரல் 1, 2023 - வருடாந்திர வங்கிகள் கணக்குகள் மூடப்படுவதால் ஏப்ரல் 1ஆம் தேதி வங்கிகள் மூடப்படும்.

ஏப்ரல் 4, 2023 - மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 7, 2023 - புனித வெள்ளி

ஏப்ரல் 14, 2023 - அம்பேத்கர் ஜெயந்தி

ஏப்ரல் 22 2023 - ரமலான் / ரம்ஜான்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+