சென்னை: ஆகஸ்ட் மாதம் முடிவடையும் வேளையில், அடுத்த மாதத்தில் வங்கிகள் விடுமுறை நாட்களின் பட்டியலைப் பார்க்கும் போதும் அதிர்ச்சியாக உள்ளது. செப்டம்பர் 2024ல் வங்கிகள் சுமார் 14 நாட்கள் மூடப்படுகிறது.
பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களுக்குக் கூடுதலாக, இந்த மாதத்தில் மொத்தம் இரண்டு சனிக்கிழமைகள் மற்றும் ஐந்து ஞாயிறுகள் விடுமுறையாக இருக்கும் காரணத்தால் விடுமுறை நாட்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த 14 நாட்கள் நாடு முழுவதும் விடுமுறை கிடையாது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் வங்கி விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு மாநிலத்திற்குத் தனிப்பட்ட விழாக்கள், பாரம்பரியம், கலாச்சாரம் இருக்கும் காரணத்தால் பிராந்திய அடிப்படையில் இந்த விடுமுறை மாறுகிறது.
இதனால் செப்டம்பர் மாதம் உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வங்கி பணிகள் இருக்கும் பட்சத்தில் முன்கூட்டியே உள்ளூர் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்துகொண்டு வங்கி பணிகளைத் திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது.
செப்டம்பர் 2024 இல் குறைந்தது 14 பட்டியலிடப்பட்ட விடுமுறை நாட்கள் உள்ளன. குறிப்பாக, சில நீண்ட வார இறுதி விடுமுறைகளும் உள்ளன, எனவே நீங்கள் வங்கி பணிகளுக்கான செல்லும் போது முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். சரி செப்டம்பர் மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது, முழு பட்டியலை இங்கே பார்க்கலாம்:
செப்டம்பர் 1 - ஞாயிறு - இந்தியா முழுவதும்
செப்டம்பர் 7 - விநாயகர் சதுர்த்தி - இந்தியா முழுவதும்
செப்டம்பர் 8 - ஞாயிறு / நுவாகை - இந்தியா முழுவதும் / ஒடிசா
செப்டம்பர் 13 - ராமதேவ் ஜெயந்தி / தேஜா தசமி (வெள்ளிக்கிழமை) - ராஜஸ்தான்
செப்டம்பர் 14 - இரண்டாவது சனிக்கிழமை / ஓணம் - இந்தியா முழுவதும் / கேரளா
செப்டம்பர் 15 - ஞாயிறு / திருவோணம் - இந்தியா முழுவதும் / கேரளா
செப்டம்பர் 16 - ஈத் எ மிலாத் (திங்கட்கிழமை) - இந்தியா முழுவதும்
செப்டம்பர் 17 - இந்திர ஜாத்ரா (செவ்வாய்) - சிக்கிம்
செப்டம்பர் 18 - ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி (புதன்கிழமை) - கேரளா
செப்டம்பர் 21 - ஸ்ரீ நாராயண குரு சமாதி (சனிக்கிழமை) - கேரளா
செப்டம்பர் 22 - ஞாயிறு - இந்தியா முழுவதும்
செப்டம்பர் 23 - Heroes' Martyrdom Day (திங்கட்கிழமை) - ஹரியானா
செபம்பர் 28 - நான்காவது சனிக்கிழமை - இந்தியா முழுவதும்
செப்டம்பர் 29 - ஞாயிறு - இந்தியா முழுவதும்
தமிழ்நாட்டில் செப்டம்பர் 7, 14, 16, 28 ஆம் தேதிகளில் மட்டுமே விடுமுறை, இதனுடன் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை.
ஆன்லைன் வங்கி சேவைகள்: இந்த விடுமுறை நாட்களில் பண அவசரத்திற்காக மக்கள் திண்டாட வேண்டியது இல்லை, அனைத்து வங்கிகளும் அனைத்து விடுமுறை நாட்களின் போதும் தங்கள் ஆன்லைன் வங்க சேவை மற்றும் மொபைல் வங்கி சேவை பயன்பாடுகளை எவ்விதமான தடையுமின்றி இயக்குவதை உறுதி செய்கின்றன. இதேபோல் அனைத்து வங்கிகளின் ஏடிஎம்-களையும் பணம் எடுப்பதற்கு அணுகலாம்.
வங்கி விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு இடையே மாறுபடும் என்பதால் நீங்கள் அருகிலுள்ள வங்கி கிளை மூலம் விடுமுறை நாட்களின் முழு பட்டியலை உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் சிறப்பாகத் திட்டமிடவும், கடைசி நிமிட குழப்பம் மற்றும் அவசரங்களைத் தவிர்க்கவும் முடியும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications