நாளை ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. புதிய நிதியாண்டும் நாளை முதல் தொடங்கவுள்ளது.
இதற்கிடையில் ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் இயங்கும்? எத்தனை நாட்கள் விடுமுறை? குறிப்பாக தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பற்றித் தான் பார்க்கவிருக்கிறோம்.
ஏப்ரல் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் உட்பட 10 நாட்களுக்கு மேல் வங்கிகள் (Bank Holiday) இயங்காது. அதே நேரத்தில், இந்த விடுமுறை நாட்களுக்கு கூடுதலாக, சில மாநிலங்களில் பிராந்திய அளவில் வங்கிகள் சில நாட்களுக்கு விடுமுறை உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வங்கி தொடர்பான பணிகளுக்கு உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு வங்கி விடுமுறை பட்டியலை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்ல விஷயம் தானே.

1 ஏப்ரல் 2021 - ஆண்டு நிறைவு கணக்கு
2 ஏப்ரல், 2021 வெள்ளிகிழமை - புனித வெள்ளி (Good Friday) * அரசு விடுமுறை
4 ஏப்ரல் 2021 ஞாயிற்றுக்கிழமை - ஈஸ்டர் தினம் (Easter Day) *
10, ஏப்ரல், 2021 இரண்டாவது சனிகிழமை
11, ஏப்ரல், 2021 ஞாயிற்றுகிழமை
14 ஏப்ரல் 2021 புதன்கிழமை - அம்பேத்கர் ஜெயந்தி - அரசு விடுமுறை
18 ஏப்ரல், 2021, ஞாயிற்றுகிழமை
24, ஏப்ரல் 2021, நான்காவது சனிக்கிழமை
25 ஏப்ரல் 2021 ஞாயிற்றுக்கிழமை - மகாவீர் ஜெயந்தி ( அரசு விடுமுறை)
மற்ற மாநில விடுமுறைகள்
ஏப்ரல் 5 - பாபு ஜக்ஜீவன் ராமின் பிறந்த நாள் ( ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் விடுமுறை)
ஏப்ரல் 6 - மஹாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 13 - குடி பத்வா / சஜிபு நோங்கம்பாம்பா / நவராத்திரியின் முதல் நாள் / தெலுங்கு புத்தாண்டு / உகாதி / பைசாக்கி (பெலாப்பூர், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர்)
ஏப்ரல் 15 - இமாச்சல் தினம் / பெங்காலி புத்தாண்டு / சிர்ஹுல்
(ஹிமாச்சல் பிரதேசம், கேரளா, ஜார்கண்ட்,மேற்கு வங்கம்)
ஏப்ரல் 16 - போஹாக் பிஹு (குவஹாத்தி)
21 ஏப்ரல் 2021 புதன்கிழமை ராம் நவமி ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே (தமிழகத்தில் இயங்கும்)
இந்த விடுமுறை நாட்கள் வங்கி ஊழியர்களுக்கு மட்டும் அல்ல, நமது தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள உதவும். ஏனெனில் நமது வங்கி தொடர்பான வேலைகளை முன் கூட்டியே செய்து கொள்ளலாம். கடைசி நேரத்தில் பரிமாற்றம் செய்ய முடியாமல் அவதிப்படுவதை விட இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் முன் கூட்டியே செலுத்தி விடலாம்.
மேற்கண்ட விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் சற்று வேறுபடுவதால், மக்கள் அதற்கேற்ப செயல்படுவது நல்லது. வங்கிகள் பொதுவாக நம் பணத்தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அம்சமாகும். ஆக முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications