வங்கிக்கு சென்று நகை மீட்பது முதல் பணம் டெபாசிட் செய்வது வரை அனைத்திற்கும் வங்கிக்கு செல்வது முக்கியம். எனவே விடுமுறைகள் குறித்த விவரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிலர் தங்களுக்கே தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று அதன் பின் விஷயத்தை தெரிந்து கொண்டு வீட்டிற்கு வந்த சம்பவங்களும் நடந்து இருக்கும். இது போன்ற விஷயங்களுக்காக தான் முன்னரே வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
திருவிழா நாட்கள், தேசிய விடுமுறைகள், பிராந்திய மற்றும் மத விழாக்களுக்கான விடுமுறைகளுடன் சேர்த்து சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் வங்கிகளின் பொது விடுமுறை நாட்கள் மாறுபடும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் உள்ளூர் வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
ஆகஸ்ட் 2024-இல் பொது விடுமுறை நாட்கள் உட்பட 9 விடுமுறை நாட்கள் உள்ளது. இதில் மிகக் குறிப்பாக மாத இறுதியில் நீண்ட விடுமுறை இருப்பதால், அதற்கேற்ப உங்கள் வங்கி வருகையை பற்றி திட்டமிடுவது அவசியம்.
ஆகஸ்ட் 2024 வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல்:
ஆகஸ்ட் 4 - ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை
ஆகஸ்ட் 10 - இரண்டாவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை
ஆகஸ்ட் 11 - ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை
ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம் / பார்சி புத்தாண்டு - தேசிய விடுமுறை.
ஆகஸ்ட் 18 - ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை
ஆகஸ்ட் 19 - ராக்கி பண்டிகை - உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு.
ஆகஸ்ட் 24 - நான்காவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை
ஆகஸ்ட் 25 - ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை
ஆகஸ்ட் 26 - கிருஷ்ண ஜென்மபூமி - பெரும்பாலான மாநிலங்களுக்கு விடுமுறை.
இணைய வங்கி சேவைகள்: என்னதான் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டாலும், அவசர காலங்களில் தேவைப்படும் தொகைக்காக அனைத்து வங்கிகளும் ஆன்லைன் இணையதளங்கள் மற்றும் மொபைல் பேங்கிங் பயன்பாடுகளை அனைத்து விடுமுறை நாட்களிலும் பயனர்களுக்கு வழங்குகிறது. மேலும் நீங்கள் எந்த ஒரு வங்கியில் உள்ள ATM-மிலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
உள்ளூர் விதிமுறைகள் காரணமாக மாநிலத்திற்கு மாநிலம் பொது விடுமுறைகள் மாறுபடும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும். எனவே, சிறந்த திட்டமிடலுக்காக உங்கள் வங்கியின் விடுமுறை நாட்களின் பட்டியலை தெரிந்து வைத்துக் கொள்வது தேவையற்ற குழப்பத்தை உண்டாக்காமல் இருக்கும்.
அனைத்து பொது விடுமுறை நாட்களும் இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அறிவிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மாநில அரசுகளின் தேசிய மற்றும் உள்ளூர் விழாக்கள்,மத விழாக்கள், கலாச்சார நடைமுறைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, வங்கிகளுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை RBI அறிவிக்கிறது.


Click it and Unblock the Notifications