ஒவ்வொரு மாதமும் தொடங்கும் போது உங்களுக்கு வங்கி வேலைகள் ஏதாவது இருந்தால் அந்த மாதத்தின் விடுமுறை பட்டியலை தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். அதே போல இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை உண்டு. இதோடு சேர்த்து இந்த ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வீண் அலைச்சலை தவிர்ப்பதற்கு முன்கூட்டியே விடுமுறை தினங்களை தெரிந்து கொள்வது நல்லது. அதற்கேற்ப வங்கிப் பணிகளையும் நீங்கள் முடித்துக் கொள்ளலாம். விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் மாநிலங்களுக்கு மாநிலம் இந்த விடுமுறை தினங்கள் மாறுபடும்.

விடுமுறை நாட்களின் லிஸ்ட்:
ஆகஸ்ட் 2, 2026: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.
ஆகஸ்ட் 4, 2026: கெர் பூஜா என்ற பண்டிகையின் காரணமாக திரிபுராவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 8, 2026: சிக்கிமில் கொண்டாடப்படும் "டெண்டோங் லோ ரம் ஃபாட்" எனும் பண்டிகைக்காக அங்குள்ள வங்கிகள் ஆகஸ்ட் 8 அன்று மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்டு 9, 2026: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை
ஆகஸ்ட் 13, 2026: தேசபக்தர்கள் தினத்தை முன்னிட்டு மணிப்பூரில் உள்ள வங்கிகளுக்கு அன்று விடுமுறை.
ஆகஸ்ட் 15, 2026: சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் வங்கிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்டு 16, 2026: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை.
ஆகஸ்ட் 19, 2026: மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் பிறந்தநாளுக்காக திரிபுரா மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 22, 2026: இது ஆகஸ்ட் மாதத்தில் வரும் 4-வது சனிக்கிழமை. அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 23, 2026: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை
ஆகஸ்ட் 25, 2026: மிலாடி நபி, முதல் ஓணம், முஹம்மது நபியின் பிறந்தநாள் போன்றவற்றுக்காக கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 26, 2026: கேரளாவில் ஐத்-இ-மிலாத், பரவாஃபத், திருவோணம் போன்ற பண்டிகைகளுக்காக அங்குள்ள வங்கிகளுக்கு விடுமுறை. ஒரு சில மாநிலங்களில் மிலாடி நபி ஆகஸ்ட் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலுங்கானா, மணிப்பூர், ஜம்மு & ஸ்ரீநகர், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார், புது தில்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 28, 2026: ஈத்-இ-மிலாத்-உல்-நபி, ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி, அய்யன்காளி ஜெயந்தி, ரக்ஷா பந்தன், பாங்-லாப்சோல் போன்ற பண்டிகளுக்காக குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர், கேரளா, உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 30, 2026: ஞாயிற்றுக்கிழமைக்காக வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை
விடுமுறை தினங்களிலும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அந்தந்த வங்கியின் நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications