இந்தியாவில் ஒளி திருநாளான தீபாவளி, ஒரு நாள் பண்டிகை மட்டுமல்ல. இதன் கொண்டாட்டங்கள் பல நாட்கள் நீடிக்கும். ஒவ்வொரு நாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. பெரும்பாலான மாநிலங்களில் அக்டோபர் 20 அன்றும், சில மாநிலங்களில் 21 அன்றும் என பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதில் எந்த நாட்களில் எல்லாம் வங்கிகள் செயல்படாது என்பதை காணலாம்.
2025 அக்டோபர் 20 அன்று திரிபுரா, குஜராத், மிசோரம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், அசாம், தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கேரளா, நாகாலாந்து, மேற்கு வங்கம், டெல்லி, கோவா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திங்களன்று தமிழ்நாட்டில் வங்கிகள் செயல்படாது.

அக்டோபர் 21, 2025 அன்று மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், மணிப்பூர், சத்தீஸ்கர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தீபாவளி அமாவாசை (லட்சுமி பூஜை), தீபாவளி மற்றும் கோவர்தன் பூஜைக்காக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
சில மாநிலங்களில் 5 நாட்கள் வரை வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிக்கிமில் அக்டோபர் 20 முதல் 23 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி விடுமுறை உண்டு. ஞாயிற்றுக்கிழமையும் இதில் அடங்கும். சத்தீஸ்கரில் அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் வங்கி விடுமுறை; ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
மகாராஷ்டிராவில் அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரு நாட்கள் வங்கி விடுமுறை. குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
அக்டோபர் 22, 2025 அன்று குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரகாண்ட், சிக்கிம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தீபாவளி, விக்ரம் சம்வத் புத்தாண்டு, கோவர்தன் பூஜை, பலிபத்யாமி மற்றும் லட்சுமி பூஜை ஆகியவற்றை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
அக்டோபர் 23, 2025 அன்று பாய் தூஜ், சித்ரகுப்த் ஜெயந்தி, லட்சுமி பூஜை, பராத்ரித்விதயா மற்றும் நிங்கால் சக்கோபா ஆகிய பண்டிகைகளுக்காக குஜராத், சிக்கிம், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.
2025 அக்டோபரில் ஆயுத பூஜை, விஜயதசமி, துர்கா பூஜை, மகாத்மா காந்தி ஜெயந்தி, லட்சுமி பூஜை, மகரிஷி வால்மீகி ஜெயந்தி, குமார் பௌர்ணமி, கர்வா சௌத், கட்டி பிஹு, தீபாவளி, நரக சதுர்தசி, கோவர்தன் பூஜை, பலிபத்யாமி, பாய் தூஜ், சத் பூஜை மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் போன்ற பல்வேறு விழாக்களுக்காக வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications