இன்னும் 3 நாட்களில் புத்தாண்டு வரவிருக்கிறது. ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி 2025-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தொடர்ந்து இருக்காது. உள்ளூர் மற்றும் பொது விடுமுறை நாட்களை பொறுத்து அந்தந்த மாநிலங்களில் விடுமுறை நாட்கள் மாறுபடும்.
2025-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்கான வங்கி விடுமுறைகளின் பட்டியல்:

ஜனவரி 1: புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை.
ஜனவரி 2 : மிசோரமில் புத்தாண்டு மற்றும் கேரளாவில் மன்னம் ஜெயந்தி காரணமாக அந்தந்த பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
ஜனவரி 5: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு பொது விடுமுறை
ஜனவரி 6: ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் குரு கோவிந்த் சிங் ஜெயந்தி காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜனவரி 11: இரண்டாவது சனிக்கிழமை அன்று வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை
ஜனவரி 12: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. அதோடு அன்றைய தினம் விவேகானந்தர் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 14: மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
ஜனவரி 15: திருவள்ளுவர் தினம், மக் பிஹு மற்றும் மகர சங்கராந்தி காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜனவரி 16: உழவர் திருநாள் காரணாமாக தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 19: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.
ஜனவரி 22: மணிப்பூரில் ஐமோயின் திருவிழாவை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜனவரி 23: நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
ஜனவரி 25: நான்காவது சனிக்கிழமை என்பதால் அனைத்து வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜனவரி 26: குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.
ஜனவரி 30: சிக்கிமில் சோனம் லோசரை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜனவரி மாதத்தில் மொத்தமாக 15 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த நாட்களில் பயனர்கள் தொடர்ந்து தங்களுடைய நெட் பேங்கிங் தளங்களை பயன்படுத்தி பலனடையலாம். ஆனால் வீண் அலைச்சலைத் தவிர்ப்பதற்கு வங்கி விடுமுறை நாட்கள் குறித்து முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். ஏனெனில் சிலர் வெளியூர்களில் இருந்து வங்கிகளுக்கு வரக்கூடும். இது போன்ற சூழ்நிலைகளில் வங்கி விடுமுறையை தெரிந்து கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் அது வீண் சிரமத்தை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications