சென்னை: சிறு வயதில் பள்ளிக்கூடம் செல்லும் போது, ஒரு மாதத்தில் எத்தனை நாள் அரசாங்க விடுமுறை வருகிறது என்பதை நம்மில் பலர் எண்ணியிருப்போம். அதேபோல தற்போது உள்ள வங்கி ஊழியர்களும் வருகின்ற ஜூலை மாதத்திற்கான விடுமுறை நாட்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். வங்கி விடுமுறைகள் குறிப்பாக வங்கி ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், வங்கி சேவைகளை நம்பி இருக்கும் பொது மக்களையும் பாதிக்கிறது. எனவே இந்த விடுமுறைகளுக்கு ஏற்ப உங்களுடைய வருகைகளை மாற்றி அமைப்பது அவசியம்.
ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள்: ரிசர்வ் வங்கியின் (RBI) வங்கி விடுமுறை நாட்களின்படி, ஜூலை மாதம் நெருங்கி வருவதால், அந்த மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொள்வது அவசியம்.

ஜூலை 3, 2024: ஷில்லாங்கில் உள்ள "Beh Dienkhlam" என்று சொல்லப்படுகிற பண்டிகைக்காக வங்கிகள் மூடப்படும்.
ஜூலை 6, 2024: MHIP தினத்திற்காக ஐஸ்வாலில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
ஜூலை 7, 2024: ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
ஜூலை 8, 2024: காங் ரதஜாத்ராவுக்காக இம்பாலில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
ஜூலை 9, 2024: காங்டாக்கில் உள்ள வங்கிகள் Drukpa Tshe-zi என்ற பண்டிகைக்காக மூடப்படும்.
ஜூலை 13, 2024: இரண்டாவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
ஜூலை 14, 2024: ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
ஜூலை 16, 2024: டேராடூனில் உள்ள வங்கிகள் ஹரேலாவுக்கு மூடப்படும்.
ஜூலை 17, 2024: மொஹரம் பண்டிகைக்காக பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். அகர்தலா, அய்ஸ்வால், பேலாப்பூர், பெங்களூர், போபால், சென்னை, ஹைதராபாத், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, பாட்னா, ராஞ்சி, ராய்ப்பூர், ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் விடுமுறை.
இருப்பினும், பனாஜி, திருவனந்தபுரம், கொச்சி, கோஹிமா, இட்டாநகர், இம்பால், டேராடூன், காங்டாக், கவுகாத்தி, சண்டிகர், புவனேஸ்வர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் வங்கிகள் சில திறந்திருக்கும்.
ஜூலை 21, 2024: ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
ஜூலை 27, 2024: நான்காவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
ஜூலை 28, 2024: மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
மாநிலத்திற்கு ஏற்ப விடுமுறைகள்: வங்கி விடுமுறைகள் பொதுவாக மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடலாம். இந்திய ரிசர்வ் வங்கி பட்டியலின் படி, ஒவ்வொரு மாநிலமும் உள்ளூர் பண்டிகைகளைக் கொண்டிருக்கும். ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாநில வாரியான விடுமுறை நாட்களின் முழு பட்டியல் கிடைக்கும்.
ஆன்லைன் பேங்கிங்: வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவைகளை ஆன்லைனில் பெறலாம். பெரும்பாலான வங்கிச் சேவைகள் ஆன்லைனில் கிடைக்கின்றன, இதனால் வாடிக்கையாளர்கள் விடுமுறை நாட்களிலும் தங்கள் வீட்டில் இருந்தபடியே நிதிகளை நிர்வகிக்க முடியும்.


Click it and Unblock the Notifications