ஜூன் மாதத்தில் எத்தனை நாள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள்..!

நாளை ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், பற்பல மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இதற்கிடையில் தற்போது நாம் பார்க்கவிருப்பது ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை என்று தான்.

இந்த ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் பொது விடுமுறை என்பது 6 நாட்கள் மட்டுகே. மற்ற விடுமுறைகள் சில மாநிலங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

அதெல்லாம் சரி தமிழகத்தில் எத்தனை நாள் விடுமுறை? ஏற்கனவே கொரோனா காரணமாக வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி விடுமுறை நாட்களையும் தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது தானே.

வேறுபடும் விடுமுறைகள்

வேறுபடும் விடுமுறைகள்

நாடு முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுகிழமையன்று வங்கிகளுக்கு விடுமுறை. இது தவிர இரண்டாவது சனிகிழமை மற்றும் நான்காவது சனிகிழமையன்று விடுமுறை. இது தவிர மற்ற பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கும் விடுமுறை தான். எனினும் மாநிலங்களுக்கு மாநிலம் சற்று சில விடுமுறை நாட்கள் வேறுபடுகிறது.

பேருதவியாக இருக்கும்

பேருதவியாக இருக்கும்

தேசிய விடுமுறைகள் என்னென்ன? மற்ற விடுமுறைகள் என்ன? என்பதை தெரிந்து வைத்துக் கொண்டால், இது உங்களது வங்கி பரிவர்த்தனைகளை திட்டமிட்டு செயல்பட உதவிகரமாக இருக்கும். அதிலும் இந்த கொரோனா காலகட்டத்தில் பலவித கட்டுப்பாடுகள் நிலவி வருவதால், இது மிக பயனுள்ளதாகவே இருக்கும்.

ஜூன் மாத விடுமுறைகள்

ஜூன் மாத விடுமுறைகள்

6, ஜூன் 2021 ஞாயிற்றுகிழமை

12, ஜூன் 2021 இரண்டாவது சனிக்கிழமை
13, ஜூன் 2021 ஞாயிற்றுகிழமை
15, ஜூன் 2021, செவ்வாய்கிழமை -Y.M.A day/ ராஜா சங்கராந்தி மிசோரத்தின் ஐஸ்வால் மற்றும் ஒடிசாவின் புவனேஸ்வரில் அனைத்து வங்கிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20, ஜூன் 2021 ஞாயிற்றுகிழமை
25, ஜூன் 2021, சனிக்கிழமை - குரு ஹர்கோபிந்த் ஜியின் பிறந்த நாள் - ஜம்மு மற்றும் ஸ்ரீ நகரில் அனைத்து வங்கிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
26, ஜூன் 2021, நான்காவது சனிக்கிழமை
27, ஜூன் 2021 ஞாயிற்றுகிழமை
30, ஜூன் 2021- ரெம்னா நி - மிசோரத்தின் ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்.

தமிழகத்தில் எத்தனை நாட்கள்

தமிழகத்தில் எத்தனை நாட்கள்

6, ஜூன் 2021 ஞாயிற்றுகிழமை

12, ஜூன் 2021 இரண்டாவது சனிக்கிழமை
13, ஜூன் 2021 ஞாயிற்றுகிழமை
20, ஜூன் 2021 ஞாயிற்றுகிழமை
26, ஜூன் 2021, நான்காவது சனிக்கிழமை
27, ஜூன் 2021 ஞாயிற்றுகிழமை

திட்டமிட்டு செயல்படுங்கள்

திட்டமிட்டு செயல்படுங்கள்

இந்தியாவின் சில பகுதிகளில் 9 நாட்கள் விடுமுறை என்றாலும், தமிழகத்தினை பொறுத்தவரையில் 6 நாட்கள் இந்த மாதம் விடுமுறைகள் உள்ளது. அதிலும் இந்த விடுமுறைகள் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள், ஞாயிற்ற்கு கிழமைகளில் மட்டுமே விடுமுறையாகும். ஆக இது தமிழகத்தில் இதன் தாக்கம் இருக்காது.

கவனமுடன் செயல்படுங்கள்

கவனமுடன் செயல்படுங்கள்

வாடிக்கையாளர்கள் இந்த நெருக்கடியான காலகட்டங்களில், வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்து டிஜிட்டல் வங்கி சேவைகளை பயன்படுத்தலாம். அப்படியே வங்கிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், மாஸ்க், சமூக இடைவெளி என்பதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+