வரும் மார்ச் 2021ம் மாதத்தில் வங்கி விடுமுறைகள் 10 நாட்களுக்கு மேல் உள்ளது.
இது இரண்டாவது சனி, ஞாயிற்றுகிழமை, 4வது சனிகிழமை, மாநில விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது. இந்த விடுமுறை எல்லாம் சேர்த்தால், இந்த மார்ச் 2021ல் 11 நாட்கள் விடுமுறையாகும்.
இந்த விடுமுறை கால கட்டத்தில் வங்கி பரிவர்த்தனைகள் செய்ய முடியாது என்பதால், அதற்கேற்ப மக்கள் செயல்படுவது நல்லது. ஏனெனில் அந்த சமயத்தில் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வங்கிகளுக்கு பொது விடுமுறை
நாடு முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுகிழமையன்று வங்கிகளுக்கு விடுமுறை. இது தவிர இரண்டாவது சனிகிழமை மற்றும் நான்காவது சனிகிழமையன்று விடுமுறை. இது தவிர மற்ற பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கும் விடுமுறை தான். எனினும் மாநிலங்களுக்கு மாநிலம் சில விடுமுறை நாட்கள் வேறுபடுகிறது.
மார்ச் மாத விடுமுறை தினங்கள்
5, மார்ச் 2021 வெள்ளிக்கிழமை - chapcher kut (Mizoram)
7, மார்ச் 2021 ஞாயிற்றுகிழமை
8 மார்ச் 2021 திங்கட்கிழமை - மகரிஷி தயானந்த் சரஸ்வதி ஜெயந்தி * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
11 மார்ச் 2021 வியாழக்கிழமை - மகா சிவராத்திரி (அரசு விடுமுறை)
13, மார்ச் 2021, இரண்டாவது சனிகிழமை
14, மார்ச் 2021 ஞாயிற்றுகிழமை
21, மார்ச் 2021 ஞாயிற்றுகிழமை
22, மார்ச் 2021 பீகார் டே
27, மார்ச் 2021 நான்காவது சனிக்கிழமை
28, மார்ச் 2021 ஞாயிற்றுகிழமை
முன்னதாக திட்டமிட்டு செயல்படுங்கள்
இந்த விடுமுறை நாட்களில் வங்கிகளில் விடுமுறை நாட்கள் என்பதால், ஏடிஎம்களில் பணம் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆக மக்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும், கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன் கூட்டியே செலுத்தி விடலாம்.
விடுமுறைகள் மாறுபடலாம்
மேற்கண்ட விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் சற்று வேறுபடுவதால், மக்கள் அதற்கேற்ப செயல்படுவது நல்லது. வங்கிகள் பொதுவாக நம் பணத்தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அம்சமாகும். ஆக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆக பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி செயல்பட்டால் தேவையற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications