Bank Holidays in March 2023: மார்ச் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையும் அடங்கும். இதில் சில விடு முறை தினங்கள் என்பது மாநில வாரியாகவும் இருக்கலாம். ஆக அதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்று.
இந்த விடுமுறை நாட்களை முன் கூட்டியே தெரிந்து கொள்வது, உங்களது வங்கி தேவைகளை முன் கூட்டியே பூர்த்திக் செய்து கொள்ள பயனுள்ள ஒன்றாக இருக்கும். குறிப்பாக விடுமுறை நாட்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், விடுமுறை நாட்களில் வங்கி சேவைகளையும் பெற முடியும் எனலாம்.
எத்தனை நாட்கள் விடுமுறை?
மார்ச் 3 சாப்சார் குட் (ஐஸ்வால், மிசோரம்)
மார்ச் 5 ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 7 ஹோலிகா தஹன், ஹோலி - (பெலாப்பூர், டேராடூன், குவகாத்தி, ஹைத்ராபாத், தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பனாஜி, ராஞ்சி, ஸ்ரீ நகர் உள்ளிட்ட பகுதிகளில் விடுமுறை)
மார்ச் 8 துலேதி / டோல்ஜாத்ரா / ஹோலி - (அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், போபபால், புபனேஷ்வர், , சண்டிகர், டேராடூன், கேங்டாங்)
மார்ச் 9 ஹோலி பண்டிகை (பாட்னா)
மார்ச் 11 மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 12 ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 22 குடி பத்வா / உகாதி / பீகார் நாள் / சஜிபு நோங்மபான்பா (சீரௌபா) / தெலுங்கு புத்தாண்டு (பெலாப்பூர், பெங்களூர், சென்னை, ஹைத்ராபாத், இம்பால், மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் பாட்னா)
மார்ச் 25 நான்காவது சனிக்கிழமை
மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 30 ஸ்ரீ ராம நவமி (அகமதாபாத், போபால், புபனேஷ்வர், சண்டிகர், பாட்னா, லக்னோ, மும்பை மற்றும் நாக்பூர்)
தமிழ்நாட்டில் விடுமுறை நாட்கள்?
மார்ச் 5 - ஞாயிறு விடுமுறை
மார்ச் 11 - இரண்டாம் சனிக் கிழமை விடுமுறை
மார்ச் 12 - ஞாயிறு விடுமுறை
மார்ச் 19 - ஞாயிறு விடுமுறை
மார்ச் 22 - தெலுங்கு வருடப்பிறப்பு (உகாதி) விடுமுறை
மார்ச் 25 - நான்காம் சனிக் கிழமை விடுமுறை
மார்ச் 26 - ஞாயிறு விடுமுறை
தாக்கம் எப்படி?
அண்டை மாநிலங்களில் விடுமுறை என்பது அதிகம் இருந்தாலும், தமிழகத்தில் பெரியளவில் விடுமுறை என்பது இல்லை. ஆக இது வங்கி சேவையில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தாது என்றாலும், அண்டை மாநிலங்கள் செல்பவர்களுக்கு இது பயனுள்ள ஒன்றாக இருக்கலாம்.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிப் பணிகளை திட்டமிட்டு செய்யும் வகையில் ஒவ்வொரு மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலும் ரிசர்வ் வங்கியால் வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை நாட்கள் இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications