ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை குறித்த விவரங்களை பார்த்து வரும் நிலையில் நவம்பர் மாதம் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, மிலாடிநபி, தீபாவளி என அதிக விடுமுறை நாட்கள் இருந்தது என்பது தெரிந்ததே.
ஆனால் நவம்பர் மாதத்தில் சனி, ஞாயிறு தவிர வேறு சிறப்பு விடுமுறைகள் எதுவும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வங்கி விடுமுறை
வங்கி தொடர்பான பணிகளை திட்டமிட்டு செய்வதற்கு வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.
விடுமுறை நாட்கள்
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை மனதில் வைத்துக்கொண்டு விடுமுறை நாட்களுக்கு முன்பே வங்கிப் பணிகளை பலர் திட்டமிட்டு செய்து வருகின்றனர்.
நவம்பர் விடுமுறை நாட்கள்
அந்த வகையில் அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை கிடைத்த நிலையில் அடுத்த மாதமான நவம்பர் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிறு தவிர வேறு விடுமுறைகள் இந்திய அளவில் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
பண்டிகை கால விடுமுறை
ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் சிறப்பு திருவிழாக்கள் காரணமாக அந்த மாநிலங்களில் மட்டுமே ஒரு சில நாட்கள் பண்டிகை கால விடுமுறையாக இந்த மாதம் உள்ளது. எனவே வங்கிகள் அனைத்தும் மூடப்படும் தேசிய விடுமுறையாக நவம்பர் மாதத்தில் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் வங்கி விடுமுறை
இந்த நிலையில் நவம்பர் மாத விடுமுறை பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்.
நவம்பர் 1: கன்னட ராஜ்யோத்சவா/குட். பெங்களூரு மற்றும் இம்பால் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.
நவம்பர் 6: ஞாயிறு விடுமுறை
நவம்பர் 8: குருநானக் ஜெயந்தி/கார்த்திகை பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா. இந்த நாளில் ஐஸ்வால், பேலாப்பூர், போபால், புவனேஷ்வர், சண்டிகர், டேராடூன் மற்றும் ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.
நவம்பர்: 11 கனகதாச ஜெயந்தி/வாங்கல விழா. இந்த நாளில் பெங்களூரு, இம்பால் மற்றும் ஷில்லாங் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.
நவம்பர் 12: இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை
நவம்பர் 13: ஞாயிறு விடுமுறை
நவம்பர் 20: ஞாயிறு விடுமுறை
நவம்பர் 23: செங் குட்ஸ்னெம். ஷில்லாங் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை
நவம்பர் 26: 4வது சனிக்கிழமை விடுமுறை
நவம்பர் 27: ஞாயிறு விடுமுறை
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications