இந்தியா ரிசர்வ் வங்கியின் விடுமுறை அட்டவணையைப் பொறுத்து தான், இந்தியாவில் செயல்படும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. அதன்படி 2024-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 13 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் தங்கள் சேவையை பெறுவதற்கு வங்கி செயல்படும் நாட்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பதிவில் நவம்பர் மாதம் எந்தெந்த நாட்களில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
நவம்பர் மாதத்தில் தீபாவளி, சத் பூஜை, குருநானக் ஜெயந்தி, மற்றும் வழக்கமான ஞாயிறு விடுமுறை, இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை போன்ற விடுமுறை நாட்களை சேர்த்து வங்கிகள் 13 நாட்கள் மூடப்பட உள்ளது. இதன் காரணமாக கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர் பிரதேஷ், பீகார் போன்ற மாநிலங்களிலும் வங்கி சேவை கிடைக்காது.

ஆனால் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும் தொடர்ந்து நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.
நவம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:
நவம்பர் 1: தீபாவளி அமாவாசை
நவம்பர் 2: தீபாவளி (பாலி பிரதிபதா)
நவம்பர் 3: ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை
நவம்பர் 7: சாத்
நவம்பர் 8: சாத்
நவம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை
நவம்பர் 10: ஞாயிறு
நவம்பர் 12: எகாஸ்-பாக்வால்
நவம்பர் 15: குருநானக் ஜெயந்தி
நவம்பர் 17: ஞாயிறு
நவம்பர் 18: கனகதாச ஜெயந்தி
நவம்பர் 23: செங் குட்ஸ்னெம், நான்காவது சனிக்கிழமை
நவம்பர் 24: ஞாயிறு
மாநில வாரியான விடுமுறை நாட்கள்:
நவம்பர் 1: தீபாவளி மற்றும் கன்னட தேசிய விழா.
நவம்பர் 7 & 8: சத் பூஜை - பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் அகியவற்றில் விடுமுறை.
நவம்பர் 15: குருநானக் ஜெயந்தி. பல மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் 18 & 23: கர்நாடகா மற்றும் மேகாலயாவில் பிராந்திய விடுமுறைகள்.
வங்கிகளுக்கு சென்று நகை அடமானம் வைப்பது மற்றும் நகையை மீட்பது போன்ற சேவைகளை இந்த விடுமுறை நாட்களில் பெற முடியாது. இருப்பினும் ஏடிஎம் மையங்கள் இருப்பதால் தேவைப்படும் நேரங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் அல்லது யுபிஐ பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். அதற்கு ஏற்ப உங்களுடைய வருகையை திட்டமிடுங்கள்.


Click it and Unblock the Notifications