அக்டோபர் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை! கொண்டாட்டத்தில் ஊழியர்கள்! மாநில வாரியான லிஸ்ட்!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகளின் கீழ் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும். ஆர்பிஐ விடுமுறை காலண்டரின் படி ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை நாட்கள். அதேபோல அக்டோபர் மாதத்தில் மாநில வாரியாக பல்வேறு விடுமுறை தினங்கள் வர இருக்கின்றன. இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு அக்டோபர் மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பல்வேறு வங்கி சேவைகளை பாதிக்கலாம். எனவே குடிமக்கள் விடுமுறை தினங்களை அறிந்து முன் கூட்டியே திட்டமிடுவது அவசியம்.

வங்கி கிளைகளுக்கு செல்ல திட்டமிடும் வாடிக்கையாளர்கள் விடுமுறை பட்டியலை கவனமாக சரி பார்க்க வேண்டும். மேலும் அந்தந்த ஊர்களின் திருவிழாக்கள் காரணமாக மாநிலத்திற்கு மாநிலம் விடுமுறை தினங்கள் மாறுபடும்.

 அக்டோபர் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை! கொண்டாட்டத்தில் ஊழியர்கள்! மாநில வாரியான லிஸ்ட்!

எந்த ஒரு சிரமத்தையும் தவிர்க்க விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்ப உங்களுடைய பரிவர்த்தனைகளை செய்யவும். அக்டோபர் மாதத்தில் காந்தி ஜெயந்தி, தசரா, துர்கா பூஜை, வால்மீகி ஜெயந்தி மற்றும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் வரவுள்ளன. இதன் காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது.

வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும் தடையின்றி நிதி பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் வகையில் மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்கள் உட்பட அனைத்து ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பேங்கிங் சேவைகளும் முழுமையாக செயல்படும். இதனால் விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி தேவைகளை இடையூறு இல்லாமல் செய்ய முடியும்.

2024-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:

அக்டோபர் 1 (செவ்வாய்): மாநில சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் 2024 காரணமாக ஜம்முவில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 2 (புதன்கிழமை): மகாத்மா காந்தி ஜெயந்தி/மஹாலய அமாவாசை காரணமாக இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 3 (வியாழன்): நவராத்ரா ஸ்தாப்னா காரணமாக ராஜஸ்தானில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

அக்டோபர் 6: ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.

அக்டோபர் 10 (வியாழன்): துர்கா பூஜை/தசரா (மகா சப்தமி) போன்ற சிறப்பு தினத்தின் காரணமாக திரிபுரா, அசாம், நாகாலாந்து மற்றும் மேற்கு வங்கத்தில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

அக்டோபர் 11 (வெள்ளிக்கிழமை): தசரா/ஆயுத பூஜை/துர்கா பூஜை காரணமாக திரிபுரா, கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, சிக்கிம், அசாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

அக்டோபர் 12 இரண்டாவது சனிக்கிழமை: தசரா (மகாநவமி/விஜயதஷ்மி)/துர்கா பூஜை காரணமாக திரிபுரா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், அசாம், மணிப்பூர், ஹைதராபாத், ஆந்திரா பிரதேஷ், ஐதராபாத், அருணாச்சல பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு, உத்தரபிரதேசம், கேரளா, நாகாலாந்து, மேற்கு வங்காளம், டெல்லி, கோவா, பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

அக்டோபர் 13: ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.

அக்டோபர் 14 (திங்கட்கிழமை): துர்கா பூஜையின் காரணமாக சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 16 (புதன்கிழமை): லட்சுமி பூஜை காரணமாக திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

அக்டோபர் 17 (வியாழன்): மகரிஷி வால்மீகி ஜெயந்தி பண்டிகைக்காக கர்நாடகா, அசாம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

அக்டோபர் 20: ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.

அக்டோபர் 26 (நான்காவது சனிக்கிழமை): ஜம்மு காஷ்மீரில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

அக்டோபர் 27: ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.

அக்டோபர் 31 (வியாழன்): தீபாவளி பண்டிகைக்காக குஜராத், மிசோரம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சண்டிகர், தமிழ்நாடு, அஸ்ஸாம், ஹைதராபாத்,ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா, அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கேரளா, நாகாலாந்து, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படவுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+