நடப்பு செப்டம்பரில் மாதத்தில் மொத்தம் 30 நாட்களில், 9 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது.
இந்த விடுமுறை காலத்தில் பணத் தட்டுப்பாடு ஏற்பாடு வாய்ப்புள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், இந்த காலத்தில் தேவை இருக்கும் பட்சத்தில் பண நெருக்கடி ஏற்படலாம். ஆக மக்கள் முன்னதாகவே பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
இங்கு மட்டும் தான் விடுமுறை
இந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி பாங் - லாப்சோல் (Pang-Lhabsol ) மற்றும் ஸ்ரீ நாரயண குரு ஜெயந்தி கொண்டாடப்படுவதால், இன்று வங்கிகளுக்கு சில மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது கேங்டோக், கொச்சின், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கொண்டாடபடுவதால் அந்தந்த பகுதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இரு நாட்கள் விடுமுறை
இதனையடுத்து செப்டம்பர் 6 வழக்கம்போல் ஞாயிற்றுகிழமை பொதுவிடுமுறை, இதனையடுத்து செப்டம்பர் 12 இரண்டாவது சனிக்கிழமை ஆதாலால் அனைத்து மாநிலங்களிலும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 ஞாயிற்றுகிழமை என்பதால் அன்றும் பொதுவிடுமுறை. ஆக தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாக உள்ளது.
மகால்ய அம்மாவாசை
செப்டம்பர் 17 அன்று மகால்ய அம்மாவாசை என்பதால், அகர்தலா, பெங்களூரு, கொல்கத்தா, ஓடிசா உள்ளிட்ட மா நிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 20 அன்று ஞாயிற்றுகிழமையன்று வழக்கம்போல் பொதுவிடுமுறை. செப்டம்பர் 21 அன்று ஸ்ரீ நாரயண குரு சமாதி தினம் கேரளாவின் கொச்சின், திருவனந்தபுரத்தில் கொண்டாடப்படுகிறது. ஆக அப்பகுதிகளில் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 26 நான் காவது சனிக்கிழமை, செப்டம்பர் 27 ஞாயிற்றுகிழமையன்று பொது விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் விடுமுறை.
திட்டமிட்டு செயல்படுங்கள்
இந்த விடுமுறை நாட்களில் அனைத்து வங்கிகளிலும் விடுமுறை என்பதால், ஏடிஎம்களில் பணம் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆக மக்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும், கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன் கூட்டியே செலுத்தி விடலாம். ஏனெனில் கடைசி நிமிடத்தில் கேஸ் மெஷினில் செலுத்திவிடலாம் என்றும் பலர் நினைப்பர். ஆனால் இவ்விடுமுறை நாட்களில அனைவரும் இம்மெஷினையே நாடுவதால், மெஷின்களில் போடமுடியாமல் போகலாம். ஆக உஷாராயிருங்க..
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications