செப்டம்பரில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. தமிழக நிலவரம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆகஸ்ட் மாதம் முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில் இன்னும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை.

இரண்டாவது சனி, ஞாயிற்றுகிழமை, 4வது சனிக்கிழமை, மாநில விடுமுறைகள், அரசு பொது விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது.

இந்த விடுமுறை எல்லாம் சேர்த்தால் இம்மாதத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் விடுமுறை இந்த விடுமுறை கால கட்டத்தில் வங்கி பரிவர்த்தனைகள் செய்ய முடியாது என்பதால், அதற்கேற்ப மக்கள் செயல்படுவது நல்லது.

ரூ.7400 கோடி.. அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டணியில் ஓலா புதிய திட்டம்..! ரூ.7400 கோடி.. அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டணியில் ஓலா புதிய திட்டம்..!

விடுமுறை நாட்கள்

விடுமுறை நாட்கள்

நாடு முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுகிழமையன்று வங்கிகளுக்கு விடுமுறை. இது தவிர இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிகிழமையன்று விடுமுறை. இது தவிர மற்ற பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கும் விடுமுறை தான். எனினும் மாநிலங்களுக்கு மாநிலம் சற்று சில விடுமுறை நாட்கள் வேறுபடுகிறது. இதனால் மாநில விடுமுறைகளையும் சேர்த்தால் இந்த விடுமுறை காலம் இன்னும் அதிகரிக்கலாம்.

பண தட்டுபாடு ஏற்படலாம்

பண தட்டுபாடு ஏற்படலாம்

ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதால், ஆக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், இந்த காலத்தில் தேவை இருக்கும் பட்சத்தில் பண நெருக்கடி ஏற்படலாம். ஆக முன்னதாகவே பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளலாம். செலுத்த வேண்டிய இடங்களுக்கும் முன்னதாக செலுத்தி விடலாம்.

வங்கிகளுக்கு பொது விடுமுறை

வங்கிகளுக்கு பொது விடுமுறை

ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி செப்டம்பர் மாதத்தில் சில மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 8, 2021 - ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதியை முன்னிட்டு கவுகாத்தியில் வங்கிகள் செயல்படாது.
செப்டம்பர் 9, 2021 - தீஜ் தினத்தை முன்னிட்டு ஹரித்தாலிகா மற்றும் கேங்டாக் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
செப்டம்பர் 10, 2021 - விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தொடர்ந்து அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் மூடப்படும்.
செப்டம்பர் 11, 2021 - இரண்டாவது சனிக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி நாளை முன்னிட்டு வங்கிகள் செயல்படாது.
செப்டம்பர் 17, 2021 - கர்ம பூஜையை முன்னிட்டு ராஞ்சியில் வங்கிகள் இயங்காது
செப்டம்பர் 20, 2021 - இந்திரஜத்ரா பண்டிகை காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
செப்டம்பர் 21, 2021 - ஸ்ரீ நாராயண குரு சமாதி நாளை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

வீகெண்ட் விடுமுறைகள்

வீகெண்ட் விடுமுறைகள்

செப்டம்பர் 5, 2021 - ஞாயிற்றுகிழமை
செப்டம்பர் 11, 2021 - இரண்டாவது சனிக்கிழமை
செப்டம்பர் 12, 2021 - ஞாயிற்றுகிழமை
செப்டம்பர் 19, 2021 - ஞாயிற்றுகிழமை
செப்டம்பர் 25, 2021 - நான்காவது சனிக்கிழமை
செப்டம்பர் 26, 2021 - ஞாயிற்றுகிழமை

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank holidays in September 2021: banks will be closed on these 13 days across most states

Bank holidays in September 2021: banks will be closed on these 13 days across most states Bank holidays in 2021.. Bank holidays in September 2021: banks will be closed on these 13 days across most states
Story first published: Friday, August 27, 2021, 17:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X