டெல்லி: அக்டோபர் மாதம் முடிய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், வரவிருக்கும் நவம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை? தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை? வாருங்கள் பார்க்கலாம். .
அக்டோபர் மாதத்தில் தான் வங்கிகள் 21 நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்தது. நவராத்திரி தொடங்கி தீபாவளி வரையில் விழாக்கால பருவமாக இருந்தது. இந்த விழாக்கால பருவத்தில் ஏராளமான விடுமுறை இருந்த நிலையில், நவம்பர் மாதத்திலும் 10 நாட்கள் விடுமுறையாகும்.
எதற்காக இந்த 10 நாட்கள் விடுமுறைகள்? என்று எங்கு வங்கிகள் செயல்படாது? குறிப்பாக தமிழக்கத்தில் என்றெல்லாம் செயல்படாது, வாருங்கள் பார்க்கலாம்.
வங்கி பொது விடுமுறை நாட்கள்
நவம்பர் 1 - செவ்வாய்க்கிழமை - இன்று கர்நாடக தினம்- கர்நாடகா மற்றும் இம்பால் மாநிலத்தில் விடுமுறை
நவம்பர் 6 - ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 8 - செவ்வாய்க்கிழமை - குரு நானக் ஜெயந்தி/கார்த்தினை பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா - அகர்தலா, பெங்களூரு, சென்னை, காங்டாக், குவகாத்தி, இம்பால், கொச்சி, பனாஜி, பாட்னா, ஷில்லாங், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்கள் தவிர மற்ற நகரங்களில் விடுமுறை
நவம்பர் 11 - வெள்ளிக்கிழமை - கனகதாசா ஜெயந்தி - பெங்களூரு மற்றும் ஷில்லாங்கில் விடுமுறை
நவம்பர் 12 - இரண்டாவது சனிக்கிழமை
நவம்பர் 13 - ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 20 - ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 23 - புதன் கிழமை - ஷில்லாங்கில் மட்டும் விடுமுறை (மேகாலயாவில் உள்ள காசி சமூகத்தினர் கொண்டாடும் விடுமுறையாகும்)
நவம்பர் 26 - 4வது சனிக்கிழமை
நவம்பர் 27 - ஞாயிற்றுக்கிழமை
தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?
நவம்பர் 6 - ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 12 - இரண்டாவது சனிக்கிழமை
நவம்பர் 13 - ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 20 - ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 26 - 4வது சனிக்கிழமை
நவம்பர் 27 - ஞாயிற்றுக்கிழமை
தமிழகத்தில் வார விடுமுறை தவிர நவம்பர் மாதத்தில் பொது விடுமுறை என்பது கிடையாது.
பிரச்சனை இல்லை
பொதுவாக வங்கி விடுமுறை நாட்களில் பணத் தேவை அதிகம் இருக்கலாம். ஆக அதற்கேற்ப முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுவதற்காக பலரும் விடுமுறை நாட்களை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவர். ஆனால் நவம்பர் மாதத்தில் விடுமுறை இல்லாததால் வங்கி பரிவர்த்தனை செய்வதில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது எனலாம்.
அலர்ட்டா இருங்க
எனினும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருப்போர், அங்கு செல்ல திட்டமிட்டுருப்பவர்கள் இந்த விடுமுறை நாட்களில், திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஏனெனில் நவம்பர் 1 மற்றும் நவம்பர் 11ம் தேதிகள் அங்கு விடுமுறை நாளாக உள்ளது.இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே தங்களது வங்கி வேலைகளை திட்டமிட்டு செய்து கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications