இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாள்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் செப்டம்பர் மாதம் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை நாட்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளன.
கேரளாவில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம், தமிழகம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி உள்பட செப்டம்பர் மாத விடுமுறை பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்
8 நாட்கள் விடுமுறை
இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை அறிவிப்பின்படி, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கிகளுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிறு போன்ற வழக்கமான விடுமுறைகளை தவிர்த்து 8 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய விடுமுறைகள்
பல வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் வங்கிக்கு வங்கி வேறுபடலாம். செப்டம்பர் மாதத்தில் உள்ள விடுமுறையில் 8 விடுமுறை நாட்கள் பிராந்திய விடுமுறைகள் ஆகும். மேலும், இந்த வங்கிகளுக்கான விடுமுறை நாட்களில், ஆன்லைன் வங்கி சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்
செப்டம்பர் 1: விநாயக சதுர்த்தி 2வது நாள் ( பனாஜி)
செப்டம்பர் 4: ஞாயிறு
செப்டம்பர் 6: கர்ம பூஜை - ராஞ்சி
செப்டம்பர் 7: முதல் ஓணம் - கொச்சி, திருவனந்தபுரம்
செப்டம்பர் 8: திருவோணம் - கொச்சி, திருவனந்தபுரம்
செப்டம்பர் 9: இந்திரஜாத்ரா - காங்டாக்
செப்டம்பர் 10: இரண்டாவது சனிக்கிழமை, ஸ்ரீ நரவண குரு ஜவந்தி - கொச்சி, திருவனந்தபுரம்
செப்டம்பர் 11: ஞாயிறு
செப்டம்பர் 18: ஞாயிறு
செப்டம்பர் 21: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் - கொச்சி, திருவனந்தபுரம்
செப்டம்பர் 24: நான்காவது சனிக்கிழமை
செப்டம்பர் 25: நான்காவது ஞாயிறு
செப்டம்பர் 26: நவ்தாத்ரி ஸ்தாப்னா/மேரா சௌரன் ஹௌபா ஆஃப் லைனிங்தௌ சனாமாஹி - ஜெய்ப்பூர், இம்பால்
ஆன்லைன் சேவை உண்டு
மேற்கண்ட வங்கிகளின் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு முன்கூட்டியே வங்கிகளில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விடுவது நல்லது. வங்கி விடுமுறை நாட்களில் ஆன்லைன் சேவை உண்டு என்றாலும், வங்கிகளில் சென்று முடிக்க வேண்டிய சில பணிகளை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications