இன்று ஜனவரி 10, 2026 அன்று வங்கி தொடர்பான பணிகளை செய்ய திட்டமிட்டிருந்தவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் வெளியிடும் விடுமுறை அட்டவணையின்படி, வங்கிகள் சில நாட்களில் மூடப்பட்டிருக்கும். குறிப்பாக, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது. இன்று ஜனவரி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால், நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்பட்டுள்ளன.

2வது சனிக்கிழமை விடுமுறை விதி
ஆர்பிஐ விதிகளின்படி, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும். ஆனால் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த விதி நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது.
இதனால், ஜனவரி 10 இரண்டாவது சனிக்கிழமை என்பதால் இன்று வங்கிகள் செயல்படாது. இதேபோல், ஜனவரி 24 அன்று வரும் நான்காவது சனிக்கிழமையும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜனவரி மாதத்தின் பிற விடுமுறைகள்
இந்த மாதத்தில் வங்கிகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும். ஜனவரி 11, 18 மற்றும் 25 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கி சேவைகள் கிடைக்காது. இதுதவிர, ஜனவரி 26 அன்று குடியரசு தினம் என்பதால் திங்கட்கிழமை அன்று வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் ஆர்பிஐ அட்டவணையின்படி நாடு முழுவதும் பொருந்தும்.
பொங்கல் பண்டிகை விடுமுறை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தினத்தில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். ஆர்பிஐ விடுமுறை அட்டவணைப்படி ஜனவரி 15, 16,17 ஆம் தேதிகளில் வங்கிகள் இயக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகள் இயங்காது. எனவே அடுத்த வாரம் 4 நாட்கள் வங்கிகள் தொடர்ந்து இயங்காது.
வங்கி தொடர்பான அவசர பணிகள் இருந்தால், இந்த விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு திட்டமிடவும். ஆன்லைன் வங்கி சேவைகள், யுபிஐ, மொபைல் பேங்கிங் போன்றவை இயல்பாக செயல்படும் என்பதால், அவற்றை பயன்படுத்தலாம். ஆனால் வங்கி கிளைக்கு சென்று செய்து முடிக்க வேண்டிய பணிகள் இருந்தால், ஜனவரி 12, 13, 14 ஆகிய நாட்களில் முடித்துக்கொள்ளவும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications