வங்கி லாக்கர் சேவைகளை அனைவரும் பயன்படுத்தியிருப்போம், ஆனால் வங்கி லாக்கரில் எதையெல்லாம் வைக்க வேண்டும், எதையெல்லாம் வைக்க கூடாது என்பது பற்றி முழுமையாக எத்தனை பேருக்கு தெரியும்..?
சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் ஒரு பெண் பாங்க் ஆப் பரோடா வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 18 லட்சம் ரூபாய் பணத்தை கரையான் அரிப்பு மூலம் மொத்தத்தையும் இழந்துள்ளார். இந்த செய்தி பலரையும் பயமுறுத்தியது மட்டும் அல்லாமல் வங்கி லாக்கர் குறித்த புரிதல் மற்றும் விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை என்பதை உணர்த்தியது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி, தற்போதுள்ள லாக்கர் வைத்திருப்பவர்கள் அனைவரும் திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும். இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி காலக்கெடு விதித்துள்ளது.
வங்கி லாக்கர்கள் நகைகள் மற்றும் ஆவணங்கள் போன்ற விலை மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற முக்கியமான நோக்கங்கள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி-களின் திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தங்களில் லாக்கர்களில் பணம் அல்லது கரன்சியை சேமிக்க அனுமதி இல்லை என்ற தனிப்பட்ட விதிமுறை திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்டு உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் ஆயுதங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள், அழிந்துபோகக்கூடிய பொருட்கள், கதிரியக்க பொருட்கள், சட்டவிரோத பொருட்களை வங்கி அல்லது அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து அல்லது தொல்லை தரக்கூடிய பொருட்கள் போன்றவற்றை பாதுக்காக்க கூடாது என வெளிப்படையாக அறிவுரை அளிக்கப்பட்டு உள்ளது.
உங்கள் வங்கி லாக்கரில் என்ன சேமிக்கலாம்..? : சொத்து ஆவணங்கள், நகைகள், கடன் ஆவணங்கள், பிறப்பு/திருமணச் சான்றிதழ்கள், சேமிப்புப் பத்திரங்கள், காப்பீட்டுக் ஆவணங்கள் மற்றும் பிற ரகசிய மற்றும் தனிப்பட்ட பொருட்களைப் பாதுகாக்க வங்கி லாக்கர்களை பயன்படுத்தலாம்.
வங்கி லாக்கரில் பொருட்களை சேமிப்பது எப்படி..? : காகிதம் மற்றும் காகிதத்தால் ஆன பொருட்கள் லாக்கரில் வைக்கும் போது, அதை ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க, காற்றுப்புகாத (ஜிப்-சீல் செய்யப்பட்ட கவர்) பிளாஸ்டிக் கவரில் வைத்து பாதுகாக்குமாறு கோட்டக் மஹிந்திரா வங்கி பரிந்துரைக்கிறது. காகித ஆவணங்கள் நீண்ட ஆயுளுக்காக லேமினேட் செய்தும் முயற்சிக்கலாம்.
வங்கி லாக்கரில் நகைகளை சேமிப்பது எப்படி..? : பொதுவாக வங்கி லாக்கர்களின் அளவு சிறியதாகவே இருக்கும். இதனால் நகைகள், ஆபரணங்கள் மற்றும் உலோக அடிப்படையிலான பொருட்கள் லாக்கருக்குள் வைக்கும் போது பிளாஸ்டிக் பெட்டிகளில் சேமிப்பது நல்லது. இதுப்போன்ற பிளாஸ்டிக் பெட்டிகளை வங்கிகள் வழங்காது
லாக்கர் சேவையில் வங்கிகளின் அடிப்படை பொறுப்பு என்ன..? :
வங்கிகள் தங்கள் சொந்த அலட்சியம், குறைபாடுகள், ஊழியர்களின் மோசடி அல்லது புறக்கணிப்பு அல்லது கமிஷன் செயல்களால் இழப்பு ஏற்படும் போது மட்டும் தான் வங்கிகள் பொறுப்பேற்கும். இதுபோன்ற காலக்கட்டத்தில், வங்கியின் பொறுப்பு என்பது லாக்கரின் வருடாந்திர வாடகையின் 100 மடங்கு தொகை வரையில் மட்டுமே பொறுப்பு கொண்டு உள்ளது.
எடுத்துக்காட்டாக, லாக்கரின் வாடகை ஆண்டுக்கு 2000 ரூபாய் என்றால் வங்கி உங்களுக்கு ரூ.200,000 வரை இழப்பீடு வழங்கும். எப்படி வங்கி வைப்பு நிதியில் 5 லட்சம் ரூபாய் மட்டுமே DICGC இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறதோ, அதேபோல் ஆர்பிஐ விதிமுறைப்படி லாக்கர் சேவையில் வருடாந்திர வாடகையின் 100 மடங்கு தொகை வரையில் மட்டுமே வங்கி காப்புறுதி அளிக்கும்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications