சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மஸ்தூரி என்ற கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயியை வங்கி மேலாளர் ஒருவர் தவறாகப் பயன்படுத்தி நிதி இழப்பை ஏற்படுத்திய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூப்சந்த் மன்ஹர் என்ற விவசாயி தனது கோழி பண்ணையை விரிவுபடுத்தும் நோக்கில் ரூ.12 லட்சம் கடன் பெற உள்ளூரில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையை அணுகியுள்ளார்.
அப்போது வங்கி மேலாளரிடமும் ரூப்சந்த் மன்ஹர் பேசியுள்ளார். வங்கி மேலாளருக்கோ நாட்டுக்கோழியின் மீது அலாதியான விருப்பம் போல.. மன்ஹரின் கடன் செயல் முறையை செயல்படுத்த வங்கி மேலாளர் 10 சதவீத கமிஷனை முன்கூட்டியே கேட்டுள்ளார்.; லோன் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மன்ஹரும் வங்கி மேலாளர் கூறிய அனைத்துக்கும் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பிறகு தனது கோழி பண்ணையிலிருந்து கோழிகளை கொடுத்து கமிஷனை சமன் செய்ய முடிவு செய்த மன்ஹர்.. வங்கி மேலாளர் கேட்டதற்கு இணங்க அவ்வப்போது கோழிகளை சப்ளை செய்துள்ளார். இதில் வாரம் வாரம் மன்ஹரும் தவறாமல் வங்கி மேலாளருக்கு கோழிகளை வழங்கியுள்ளார்.

வெறும் 2 மாதங்களில் 38,900 ரூபாயை எட்டும் அளவிற்கு வங்கி மேலாளர் கோழிகளை பெற்றுள்ளார். வாரம் வாரம் கோழிகளை சப்ளை செய்ததுதான் மிச்சம். ஆனால் கடன் செயல்முறையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதனால் விரக்தி அடைந்த மன்ஹர் வங்கி மேலாளரின் மீது புகார் அளிக்க முடிவு செய்தார்.
நாட்டுக்கோழிகளை வங்கி மேலாளருக்கு வழங்குவதற்காக மன்ஹர் அருகிலுள்ள கிராமத்திலிருந்து வாங்கியுள்ளார். அதற்கான பில்லையும் இவர் வைத்திருக்கிறார். நாட்கள் போகப்போக மேலாளர் தனது கடனை அங்கீகரிக்கும் மனநிலையில் இல்லை என்பதை புரிந்து கொண்ட மன்ஹர்.. தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். அதோடு தான் சாப்பிட்ட கோழிகளுக்கும் வங்கி மேலாளர் எந்தவித தொகையையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
வங்கி மேலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாட்டுக்கோழி வாங்குவதற்காக செலவழித்த பணத்தை மேலாளர் திருப்பி தர வேண்டும் என்றும், மன்ஹர் கோரிக்கை விடுத்தார். ஒருவேளை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டியுள்ளார். தனது கோரிக்கைகள் நிறைவேற்ற படாவிட்டால் மஸ்தூரியில் உள்ள எஸ்பிஐ கிளை முன்பு தீக்குளிக்கப் போவதாகவும் எச்சரித்தார். கிராமப்புற கடன் வழங்கும் நடைமுறைகளில் இன்னும் மாற்றங்கள் தேவை என்பதை இவருடைய கதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications