இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் டிஜிட்டல் சேவையான BOB வேர்ல்ட் மொபைல் செயலியில், புதிதாக வாடிக்கையாளர்களை சேர்ப்பதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது. இதற்கு காரணமாக மேற்பார்வை குறைபாடுகள் தொடர்பான ஆவணங்களை மேற்கோள்காட்டி இந்த தடை அறிவிப்பை வெளியிட்டது.

ரிசர்வ் வங்கி, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35A இன் கீழ், பேங்க் ஆஃப் பரோடாவு-க்கு BOB வேர்ல்ட் மொபைல் செயலியில் புதிதாக வாடிக்கையாளர்களை சேர்ப்பதை உடனடியாக நிறுத்த இந்த உத்தரவை வெளியிட்டு உள்ளது. BOB வேர்ல்ட் செயலி மூலம் சேர்க்கப்படும் வங்கி வாடிக்கையாளர்கள் நடைமுறையில் பல்வேறு பிரச்சனைகளை கண்டறிந்த காரணத்தால் ஆர்பிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
ஒரு வங்கியில் டெபாசிட் செய்பவர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அல்லது வங்கியின் நலன்களுக்கு பாதகமான முறையில் வங்கி நிர்வாகத்தின் எந்தவொரு நடவடிக்கைகளையும் தடுக்க ரிசர்வ் வங்கி பிரிவு 35A இன் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
இந்த நிலையில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து அதன் முகவர்களுக்கு பணத்தை திருடுவதை எளிதாக்கியுள்ளதாக அல் ஜசீரா பத்திரிக்கை தெரிவித்துள்ளது. சில ஏஜெண்ட்கள் சுமார் 362 வாடிக்கையாளர்களிடம் இருந்து 22 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை திருடியுள்ளது பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் உள் தணிக்கை அறிக்கைகள் மற்றும் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளது.

BOB வங்கி வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் வங்கி கணக்குகளின் அதிகாரத்தை முறைகேடாக பெற்ற சில ஏஜெண்ட்கள் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பெரும் தொகையை திருடப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. அல் ஜசீரா பத்திரிக்கை இதற்கு முன்பு பேங்க் ஆஃப் பரோடா வங்கி மற்றொரு குற்றச்சாட்டையும் முன்வைத்தது.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் மொபைல் பேங்கிங் செயலியான BoB வேர்ல்டு-ல் ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணிக்கையை அதிகரிக்க வங்கி வாடிக்கையாளர் மொபைல் நம்பரை உரிய கணக்குடன் இணைக்காமல் வங்கியின் அதிகாரிகள் மற்றும் அவர்கள் தொடர்புடையோரின் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தியதாக மீது குற்றச்சாட்டுகள் எழுந்த சில மாதங்களில் ஆர்பிஐ உத்தரவு வந்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அல் ஜசீரா பத்திரிக்கை மார்ச் 2022 இல், போபால் மண்டலத்தில் BoB அதிகாரிகளுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட வங்கியின் புதிய செயலியான "பாப் வேர்ல்ட்" க்கு, குறைந்தபட்சம் 150 வங்கி வாடிக்கையாளர்களை சேர்க்க இலக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
வங்கி அதிகாரிகள் மக்களை இதில் இணைப்பதில் அதிகப்படியான சவால்களை எதிர்கொண்ட காரணத்தால், தவறான வழிகளை பயன்படுத்தியதாக அல் ஜசீரா தெரிவித்தது.
அல் ஜசீரா அறிக்கையின் படி, சில பேக்ங் ஆஃப் பரோடா வங்கி அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள், மொபைல் எண்களுடன் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகளின் பட்டியலைப் பெற்றுள்ளனர். செயலி பதிவுக்குத் தேவையான OTP-ஐ உருவாக்க வங்கி ஊழியர்கள், வங்கி துப்புரவு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட பல்வேறு மொபைல் எண்களுடன் இந்தக் கணக்குகளை இணைத்தனர்.
இதன் பின்பு பேக்என்ட்-ல் இருந்து இந்தக் கணக்குகளைப் பதிவுசெய்த பிறகு, இணைப்பை நீக்கிவிட்டு அதே மொபைல் எண்களை மற்ற வங்கிக் கணக்குகளுக்கு மீண்டும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள BoB ஊழியர்களும் தங்கள் இலக்குகளை அடைய இந்த நடைமுறையைப் பயன்படுத்தியதாக அல் ஜசீரா குற்றம் சாட்டியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நிர்வாகி ஒருவர், BOB வங்கியின் உயர் நிர்வாகத்திற்கு ஐந்து ஈமெயில் அனுப்பியதன் மூலம் இந்த முறைகேடுகளை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications