அதானி குழுமத்திற்கு தொடர்ந்து கடன் கொடுக்க விருப்பம்.. பேங்க் ஆப் பரோடா CEO அதிரடி!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா, அதானி குழுமத்திற்கு தொடர்ந்து கடன் கொடுக்க விருப்பமுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், மோசடிகளையும், அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது முன் வைத்துள்ளது.

இதற்கிடையில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து கடும் சரிவினைக் கண்டு வருகின்றன. இது மேற்கோண்டு அதானியின் நெட் வொர்த்தானது பாதியாக சரிவினைக் கண்டுள்ளது.

மக்களின் பணம் என்னவாகும்?

மக்களின் பணம் என்னவாகும்?

இதற்கிடையில் அதானி குழுமத்தின் மீதான தரக் குறியீடுகளை தரக்குறியீட்டு நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளதாக பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள, மக்களின் பணம் என்னவாகும் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.

பேங்க் ஆப் பரோடா

பேங்க் ஆப் பரோடா

இதற்கிடையில் எஸ்பிஐ, எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்கள், தற்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என விளக்கம் கொடுத்தன. மேலும் அந்த சமயத்தில் அதானி குழுமத்திற்கு அதிகளவில் கடன் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுத்துறை வங்கிகள் மீது சர்ச்சையானது எழுந்தது. ஆனால் பொதுத்துறை வங்கிகளில் பெரியளவில் அதானி குழுமம் கடன் பெறவில்லை என்பதும் பின்னர் தெளிவானது. இப்படி ஒரு சூழலுக்கு மத்தியில் பேங்க் ஆப் பரோடா வங்கியானது அதானி, குழுமத்திற்கு தொடர்ந்து கூடுதலாக கடன் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடன் வழங்கலாம்

கடன் வழங்கலாம்

இது குறித்து பேங்க் ஆப் பரோடாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் சாதா, அதானி குழும பங்குகளில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தினை பற்றி கவலையில்லை. வங்கிக்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்யும் பட்சத்தில், கடன் வழங்கலாம் என தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்திற்கு ஆதரவு

அதானி குழுமத்திற்கு ஆதரவு

பேங்க் ஆப் பரோடாவின் இந்த கருத்துகள் அடுத்த மாதம் அதானி குழுமம் செலுத்த வேண்டிய 500 மில்லியன் டாலருக்கு, மறு நிதியளிப்பு செய்வதை சில வங்கிகள் தடுத்துள்ள நிலையில் வந்துள்ளது. இது முன்னதாக அதானி குழுமத்திற்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. எனினும் இந்த சமயத்தில் பேங்க் ஆப் பரோடாவின் இந்த கருத்துகள் அதானி குழுமத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக வந்துள்ளது.

ஏன் ஆர்வம்?

ஏன் ஆர்வம்?

எப்படியிருக்கும் எஸ்பிஐ வங்கி தான் மீண்டும் மிகப்பெரிய கடன் வழங்குனராக இருந்தார். இது 270 பில்லியன் ரூபாய் எனும் அளவுக்கு அதானி குழுமத்திற்கு கடன் வழங்கியுள்ளது.

இதே பேங்க் ஆப் பரோடா தாராவி மறுசீரமைப்பு திட்டத்தின் மத்தியில், பேங்க் ஆப் பரோடாவின் அறிவிப்பானது வந்துள்ளது. அதானி குழுமம் இந்த திட்டத்திற்கான 50.7 பில்லியன் ரூபாய் எனும் அளவுக்கு ஏலத்தினை வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து தான் அதானி குழுமத்திற்கு மேற்கோண்டு கடன் கொடுக்க தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நம்பிக்கை  அதிகரிக்கலாம்

நம்பிக்கை அதிகரிக்கலாம்

ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு சரிவடைந்த அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கை குறைந்துள்ள நிலையில், வரவிருக்கும் கடன் தவணைகளை செலுத்த திட்டமிட்டு வருவதாகவும், முன் கூட்டியே கடனை செலுத்த திட்டமிடுவதாகவும் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது அதானி குழுமம் இழந்த நம்பிக்கையை மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பேங்க் ஆப் பரோடாவின் சஞ்சீவ் சாதா, அதானி குழுமத்தின் மீதான விரிவான அறிக்கை குறித்து கருத்து கூற மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+