பல்வேறு வங்கிகளும் தங்களுடைய பிக்சட் டெபாசிட்களுக்கான (FD) வட்டி விகிதங்களை மாற்றியமைத்து வருகின்றன. பழமைவாத முதலீட்டாளர்களுக்கு பிடித்தமான ஒரு சேமிப்பு திட்டம் என்றால் அது FD தான். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் போல அல்லாமல் பாதுகாப்பான சேமிப்பு திட்டமாக இருப்பதால் பலரும் இதில் விரும்பி பணத்தை முதலீடு செய்கின்றனர். எனவே வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பேங்க் ஆஃப் பரோடா தற்போது வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. மேலும் சில புதிய FD திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. அவற்றின் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
பேங்க் ஆஃப் பரோடா சிறப்பு மழைக்கால FD திட்டத்தினை அறிமுகம் செய்து டெபாசிட் விகிதங்களை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு 399 நாட்கள் முதிர்வுக்காலம் கொண்ட FD டெபாசிட்களுக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

மேலும் 333 நாட்கள் முதிர்வுக்காலம் கொண்ட FD டெபாசிட்களுக்கு 7.15 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதில் மூத்த குடிமக்கள் 0.50% கூடுதல் வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். அப்படியானால் 399 நாட்களைக் கொண்ட FD-களுக்கு 7.75 சதவீதமும், 333 நாட்களைக் கொண்ட FD-களுக்கு 7.65 சதவீதமும் வழங்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில், ICICI பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஆகிய இரண்டு தனியார் வங்கிகளும் தங்களுடைய FD வட்டி விகிதங்களை அதிகரித்தன. ICICI பேங்க் பொது வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.5 சதவீதம் மற்றும் 7.75 சதவீதம் வரையிலும் வட்டி வழங்குகிறது.
தற்போது, பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் 1 முதல் 2 ஆண்டு கால FD திட்டங்களுக்கு 6.1 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. இதை வைத்துப் பார்க்கும்போது பேங்க் ஆஃப் பரோடா வழங்கும் ரிட்டர்ன்ஸ் மிக அதிகமாக உள்ளது.
நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்குநரான SBI, அதன் சில வணிகக் கடன்களுக்கான கடன் விகிதத்தை 5-10 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. கடந்த வாரம். அதே போல பேங்க் ஆஃப் பரோடா தனது MCLR விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது.
சமீபகாலமாக பல வங்கிகள் தங்களுடைய FD திட்டத்திற்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்து வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பல நல்ல திட்டங்கள் போய் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது. எனவே FD முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கும் முதலீட்டாளர்கள் ஒன்றுக்கு இரு முறை பல வங்கிகள் தரும் வட்டி விகிதங்களை ஆராய்ந்து, அதன் பின் முடிவு எடுக்கவும். இதனால் அதிக வட்டியின் பலனைப் பெற முடியும்.


Click it and Unblock the Notifications