பிக்சட் டெபாசிட்கள் இந்திய முதலீட்டாளர்களிடையே நம்பகமான முதலீட்டு விருப்பமாக உள்ளது. வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் FD திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு, அதிக வட்டி விகிதத்தில் வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. ஸ்மால் பைனான்ஸ் பேங்குகள் என்று சொல்லப்படுகிற சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் போட்டி வட்டி விகிதங்களில் பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குகின்றன. இந்தப் பதிவில் பேங்க் ஆஃப் பரோடா அறிமுகப்படுத்திய "BoB Monsoon Dhamaka" FD திட்டத்தின் விவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
பேங்க் ஆஃப் பரோடா: BoB Monsoon Dhamaka என்ற FD திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த FD திட்டத்தில் ஆண்டுக்கு 7.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் 399 நாட்கள் மற்றும் 333 நாட்கள் முதிர்வுக் காலத்துடன் வழங்கப்படுகிறது. 399 நாட்களுக்கு ஆண்டுக்கு 7.25 சதவீத வட்டி விகிதம் மற்றும் 333 நாட்களுக்கு 7.15 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 0.50 சதவீத கூடுதல் வட்டி விகிதத்திற்கு தகுதியுடையவர்கள், இதன் விளைவாக 399 நாட்களுக்கு 7.75 சதவீதமும், 333 நாட்களுக்கு 7.65 சதவீதமும் வட்டி கிடைக்கும். நான் காலபில் ( Non-Callable Deposits ) டெபாசிட்களுக்கு கூடுதல் 0.15% வட்டி வழங்கப்படும் என்று BoB பேங்க் அறிவித்துள்ளது. இது ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு பொருந்தும் வட்டி விகிதங்களாகும்.
மான்சூன் தமாகா டெபாசிட் திட்டத்தைப் பொறுத்தவரை, 399 நாட்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.90 சதவீதம் ஆகும். இந்த விகிதம் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 0.50 சதவீதமும், நான் காலபில் டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 0.15 சதவீதமும் கூடுதலாக வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகளாகும்.
இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு, நீங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது அருகில் உள்ள வங்கி கிளைகளுக்கு நேரடியாக செல்லலாம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம்.
சிலர் தாங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனரோ அதே வங்கியில் பிக்சட் டெபாசிட் கணக்கு தொடங்க நினைப்பார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. வருமானத்தை அதிகரிக்க எந்த வங்கியில் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கிறதோ? அதை தேர்வு செய்துதான் முதலீடு செய்ய வேண்டும். குறுகிய காலமாக இருந்தாலும் சரி.. அல்லது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தாலும் சரி.. அதிக வருமானம் பெறுவது உங்களுக்கும் நல்லது தானே! எனவே சிந்தித்து செயல்படுங்கள்!


Click it and Unblock the Notifications