5 மடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. !

டெல்லி: பொதுத்துறையை சேர்ந்த வங்கியான பேங்க் ஆப் பரோடா செப்டம்பர் மாத காலாண்டில், அதன் நிகரலாபம் ஐந்து மடங்கு அதிகரித்து 736.68 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

வதோதராவைக் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கியானது, முந்தைய ஆண்டில் இதே இரண்டாவது காலாண்டில் நிகரலாபம் 165..4 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

5 மடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. !

இதே இந்த வங்கியின் வட்டி வருவாய் 10.09 சதவிகிதம் அதிகரித்து, 7,028 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நிகர வட்டி மார்ஜின் தொகையானது 2.81 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இது கடந்த ஏப்ரல் 1, 2019 முதல் பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் தேனா வங்கி மற்றும் வஜயா வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வங்கியின் சொத்து மதிப்பானது அதிகரித்துள்ளது. இதே வாராக்கடன் மதிப்பானது 10.25 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 11.78 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே மொத்த நிகர வாராக்கடன் 3.91 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு 4.86 சதவிகிதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வங்கியின் தலைவன் செயல் அதிகாரி எஸ்.எல்.ஜெயின் இந்த வங்கி அல்லாத நிதி வங்கியும், இதே டெக்ஸ்டைல் மற்றும் பிளாஸ்டிக் நிறுவனத்தால் சுமார் 2000 கோடி ரூபாய் கடன் நழுவியுள்ளதாகவும் இந்த வங்கி தெரிவித்துள்ளது.

இதே இந்த வங்கி ரியல் எஸ்டேட் வெளிப்பாடு 15,000 கோடி ரூபாயாகவும், இதே சிக்கலான அடமானக் கடன் வழங்குனரான, குறிப்பாக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப் லிமிடெட்க்கு வெளிப்பாடு சுமார் 2000 கோடி ரூபாய் என்றும் ஜெயின் கூறியுள்ளார்.

இதே பொதுத்துறை வங்கியான உள்நாட்டு வளர்ச்சி 2 சதவிகிதம் அதிகரித்து, 5.33 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே சில்லறை கடன் விகிதமானது 16.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே உள்நாட்டு டெபாசிட் வளர்ச்சி 4 சதவிகிதம் அதிகரித்து 7.83 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த வங்கி சில்லறை கடன் மற்றும் கார்ப்பரேட் கடன்களில் கவனம் செலுத்தி வருவதாகவும், அதிலும் குறிப்பாக இந்த வங்கி கடன் கொடுத்த நிறுவனங்கள் ஏஏஏ மற்றும் ஏஏ குறியீடு உள்ள நிறுவனங்களாகும். இந்த நிலையில் இந்த வங்கி பங்கின் விலையானது கடந்த வெள்ளிக் கிழமையன்று 2.39 சதவிகிதம் அதிகரித்து, 93.80 ரூபாயாக அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+