இந்தியாவின் முன்னணி வங்கியான பேங்க் ஆப் பரோடா கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென தனது MCLR விகிதத்தை பேங்க் ஆப் பரோடா உயர்த்தியுள்ளது. இந்த திருத்தப்பட்ட விகிதங்கள் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால் வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களை பெற்றவர்களுக்கு EMI அதிகரிக்கலாம்.
2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் வகையில், 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 1 ஆண்டு காலகட்டத்திற்கான கடன் வட்டி விகிதங்களை 5 அடிப்படை புள்ளிகள் (bps) உயர்த்துவதாக பேங்க் ஆஃப் பரோடா வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தது. இந்த அறிவிப்பின் காரணமாக கடன் வாங்குபவர்களுக்கு EMI-கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 9 அன்று பேங்க் ஆஃப் பரோடாவின் ஒழுங்குமுறைத் தாக்கல் படி, ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், MCLR விகிதத்தை வங்கி மாற்றியுள்ளது.

பேங்க் ஆப் பரோடா தனது 3 மாத MCLR விகிதத்தை 8.45 சதவீதத்தில் இருந்து 8.50 சதவீதமாகவும், 6 மாத MCLR விகிதத்தை 8.70 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாகவும், 1 ஆண்டு MCLR விகிதத்தை 8.90 சதவீதத்தில் 8.95 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது. இந்த விகிதம் ஒவ்வொரு காலகட்டத்திலும் வழங்கப்படும் கடன்களுக்கு 5 bps வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பேங்க் ஆஃப் பரோடா அதன் 1 நாளைய MCLR மற்றும் 1 மாத MCLR விகிதத்தை 8.15 சதவீதம் மற்றும் 8.35 சதவீதமாக மாற்றாமல் வைத்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியால் (ஆர்பிஐ) அறிமுகப்படுத்தப்பட்ட எம்சிஎல்ஆர், வங்கிகள் தங்கள் கடன் விகிதங்களை நிர்ணயிக்கப் பயன்படுத்தும் நிர்ணயிக்கப்பட்ட பெஞ்ச்மார்க் வட்டி விகிதமாகும். வங்கிகள் இந்த விகிதத்திற்கு கீழே கடன் வழங்க முடியாது. கடன் விகிதங்களைத் தீர்மானிக்கும் போது, வங்கிகள் MCLR-ஐப் பயன்படுத்துகின்றன.
MCLR அதிகரிக்கும் போது, இந்த விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்கிறது. இதனால் கடன் வாங்குபவர்கள் அதிக EMI-களை செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது மற்றும் ஒட்டுமொத்த கடன் செலவுகள் அதிகரிப்புக்கு வழி வகுக்கிறது. இது கடன் பெறுபவர்களின் வருமானத்தை குறைக்கிறது மற்றும் புதிய கடன் பெறுபவர்களின் எண்ணிக்கையையும் கணிசமாகக் குறைக்கலாம்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications