பேங்க ஆஃப் சீனா (Bank Of China) மும்பையில் உள்ள மேக்கர் சிட்டியில் உள்ள அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.
சிலிக்கான் வேலி வங்கி திவாலானதைத் தொடர்ந்து, பேங்க் ஆஃப் சீனா அதன் வணிக ஒப்பந்தங்களை உலக அளவில் விரிவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிலிக்கான் வேலி வங்கி திவாலானதைத் தொடர்ந்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த கேப்-ஐ பயன்படுத்திக்கொள்ள பேங்க ஆஃப் சீனா களமிறங்கியுள்ளது.
இதேபோல் இந்தியா சீனா மத்தியிலான வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் ரூபாய் அடிப்படையிலான வர்த்தகத்தை செயல்படுத்த பேங்க ஆஃப் சீனா விரிவாக்கம் எளிதாக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆஃபீஸ் வாடகை!
மும்பையில் உள்ள மேக்கர் மேக்சிட்டியில் (Maker Maxity) ஒரு சதுர அடிக்கு மாதம் ரூ.500 வாடகை என்ற அடிப்படையில் 9,300 சதுர அடி பரப்பளவிலான அலுவலகத்தை பேங்க் ஆஃப் சீனா ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. மேலும் அதற்கான பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ.5.56 கோடியாகும்.
ஒப்பந்தம்!
இந்த ஒப்பந்தத்தை ரியல் எஸ்டேட் தரவு தளமான Propstack கண்டறிந்ததாக கூறப்படும் நிலையில், அக்னி Commex LLP மற்றும் Bank of China Ltd ஆகியவற்றுக்கு இடையே மார்ச் 9, 2023 அன்று கையெழுத்திடப்பட்டு உள்ளது.
பேங்க் ஆப் சீனா மும்பையில் அதிகம் விரும்பப்படும் மற்றும் நன்கு பராமரிக்கப்படும் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் தனது வங்கியை அமைத்துள்ளது. மேலும் மும்பையில் இருக்கும் மற்ற ஏ-கிரேடு வணிக இடங்களைக் காட்டிலும் அதிக வாடகைக்குக் விடப்படுகின்றன எனத் தரவுகள் கூறுகின்றன.
ஐந்து வருஷத்துக்கு இவ்ளோ வாடகையா!
மும்பையில், சீனா வங்கி குத்தகைக்கு எடுக்கப்பட்ட அலுவலகத்தின் 5 வருட வாடகை ஒப்பந்தம் குறித்து விவரங்களை பின்வருமாறு காணலாம்.
இந்த ஒப்பந்தமானது செப்டம்பர் 1,2023 முதல் ஆகஸ்ட் 31,2028 வரை போடப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 1, 2023 முதல் ஆகஸ்ட் 31, 2024 வரையிலான வாடகை மாதம் ரூ.46.34 லட்சம் ஆகவும், செப்டம்பர் 1 2024 முதல் ஆகஸ்ட் 31 2025 வரை மாதத்திற்கு ரூ.48.42 லட்சம்,
செப்டம்பர் 1 2025 முதல் ஆகஸ்ட் 31 2026 வரை மாதம் ரூ.50.60 லட்சம், செப்டம்பர் 1 2026 முதல் ஆகஸ்ட் 31, 2027 வரை மாதத்திற்கு ரூ.52.88 லட்சமும், செப்டம்பர் 1 2027 முதல் ஆகஸ்ட் 31 2028 வரை மாதம் ரூ.55.26 லட்சமும் வாடகை செலுத்துவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மும்பையின் வணிக இடத்திற்கான சராசரி வாடகை!
மும்பை மேக்கர் மேக்சிட்டியில் சராசரி வாடகை ஒரு சதுர அடிக்கு ரூ. 445-475 என்ற அளவில் உள்ளது. அதிலும் குறிப்பாக கோர் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள டாப்-எண்ட் வணிக கட்டிடங்களில் கிரேடு A வணிக இடத்திற்கான சராசரி வாடகை ஒரு சதுர அடிக்கு ரூ. 260-320 என்ற வரம்பில் இருப்பதால், வணிக வாடகை அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மிக அதிகமாக இருப்பதாக ரியல் எஸ்டேட் தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications