சமீபத்தில் மக்களின் டெபாசிட் குறைந்து வங்கிகளின் கடன் அதிகரித்ததாக ஒரு அறிக்கை வெளியானது. இதைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி விகிதத்தில் பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்த தொடங்கினர். அந்த வகையில் பல முன்னணி பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளும் புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தின. தற்போது பேங்க் ஆப் இந்தியாவும் 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட "Festive Dhamaka" என்ற பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு தற்போது 8.10 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட பிக்சட் டெபாசிட் 27 செப்டம்பர் 2024 முதல் அனைத்து பேங்க் ஆப் இந்தியா கிளைகளிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளைகளுக்குச் சென்று பிக்சட் டெபாசிட் கணக்கை தொடங்குவது அலைச்சல் என்று நினைப்பவர்கள் பேங்க் ஆப் இந்தியாவின் டிஜிட்டல் சேனல்கள் மூலமாகவும் இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தினை தொடங்கலாம்.

பேங்க் ஆப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன்கள் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக கணக்கைத் தொடங்கலாம். தங்களது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக் கால பரிசாக இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா இந்த சிறப்பு 400 நாள் கொண்ட பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.3 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட்களுக்கு பொருந்தும் என்று கூறப்படுகிறது.
இந்தப் புதிய பிக்சட் டெபாசிட் திட்டம் மூத்த குடிமக்களுக்கு 7.95% வட்டியையும், 70 வயதிற்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.10 சதவீத வட்டியும், மற்ற வாடிக்கையாளர்களுக்கு 7.4 சதவீத வட்டியும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ரூ.1 கோடிக்கு மேல் டெபாசிட் செய்பவர்களுக்கு பொருந்தும் என்று கூறப்படுகிறது.
முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான காலபில் டெபாசிட்களுக்கு வங்கி 7.95 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் 7.80 சதவீத வட்டியும், மூத்த குடிமக்கள் 7.30 சதவீத வட்டியும் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலம் காலமாக மக்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான முதன்மை காரணம் என்று பார்த்தால் அவற்றின் பாதுகாப்பு தான். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல் அல்லாமல் எந்தவித அபாயமும் இன்றி கணிசமான வட்டியை வழங்குவதால் நாட்டு மக்களிடையே பிக்சட் டெபாசிட்கள் பிற திட்டங்களை விட மிகவும் பிரபலமாக உள்ளது. அவ்வப்போது வங்கிகள் வழங்கும் இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டியின் பலனை அனுபவிக்க முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications