ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் பிக்சட் டெபாசிட்களைத் தான் தேர்ந்தெடுக்கின்றனர். அதற்கு ஏதுவாக பல வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு வட்டி விகிதங்களை வழங்கும் நிலையில்.. பேங்க் ஆப் இந்தியா புதிதாக ஒரு FD திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா "ஸ்டார் தன் விரித்தி திட்டம்" என்ற புதிய FD திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் பொது வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இருவருக்கும் லாபகரமான வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.3 கோடி வரை டெபாசிட் செய்யலாம்.
பேங்க் ஆஃப் இந்தியாவின் ஸ்டார் தன் விரித்தி திட்டம்: இந்தத் தன் விரித்தி திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் 333 நாட்களுக்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.

வட்டி விகிதம்: இந்த 333 நாள் திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 7.25 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் 0.50 சதவீதம் கூடுதல் வட்டி விகிதத்தினைப் பெறலாம். அப்படியானால் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. சூப்பர் சீனியர் சிட்டிசன்களாக இருந்தால் 7.90 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
பேங்க் ஆஃப் இந்தியாவும் அதன் FD வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது மற்றும் புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
பேங்க் ஆஃப் இந்தியாவின் FD வட்டி விகிதங்கள்:
7 முதல் 45 நாட்கள் வரையிலான FD திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீத வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.
46 முதல் 179 நாட்கள் கொண்ட FD திட்டங்களுக்கு 4.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
180 நாட்கள் முதல் 1 வருடம் வரை கொண்ட FD திட்டங்களுக்கு 6 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
333 நாட்கள் கொண்ட FD-க்கு 7.25 சதவிகித வட்டி விகிதமும், 1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 6.80 சதவிகிதமும் மற்றும் 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 6.75 சதவிகித வட்டி விகிதங்களும் வழங்கப்படுகின்றன.
3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான FD-களுக்கு 6.5 சதவீத வட்டியும், 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள FD திட்டங்களுக்கு 6 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கு மேலே குறிப்பிட்ட காலத்திற்கு 0.50 சதவீத கூடுதல் வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.
பிற சிறப்பு FD திட்டங்கள்:
அம்ரித் கலாஷ் திட்டம். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் சிறப்பு FD திட்டத்தின் கீழ் பொது வாடிக்கையாளர்கள் 7.10 சதவீத வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்கள் 7.60 சதவீத வட்டி விகிதத்தையும் பெறலாம். இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 400 நாட்கள் மற்றும் இத்திட்டத்திற்கான காலக்கெடு செப்டம்பர் 30 ஆகும்.
இந்தியன் பேங்கின் சிறப்பு FD திட்டம்: "Ind Super 300 Days" என்ற சிறப்பு FD திட்டத்தை இந்தியன் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இது பொது வாடிக்கையாளர்களுக்கு 7.05 சதவீத வட்டி விகிதத்தையும் மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவீதத்தையும் வழங்குகிறது. சூப்பர் சீனியர் சிட்டிசன்களாக இருந்தால் 7.80 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications