மும்பை: பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா (Bank of India) திங்கட்கிழமையன்று அதன் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான லாபம் மூன்று மடங்கு அதிகரித்து, 843.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அதிகளவிலான மற்ற வருவாய் காரணமாக இந்த லாபம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வங்கி முந்தைய ஆண்டு இதே காலாண்டில் அதன் லாபம் 242.62 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த வங்கியின் மொத்த வருவாய் 11,941.52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 11,526.95 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வங்கியின் நிகர வட்டி வருவாயானது 0.12 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 3,481.14 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே மற்ற முக்கிய வருவாயானது 42.9 சதவீதம் அதிகரித்து, 1707.28 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மொத்த வாராக்கடனின் மதிப்பானது 13.91% அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஜூன் காலாண்டில் 16.50% ஆகவும், இதே மார்ச் 2020ம் காலாண்டில் 14.78% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நிகர வாராக்கடன் விகிதமானது 3.58% குறைந்துள்ளது. இது ஜனவரி - மார்ச் காலாண்டில் 3.88% இருந்தது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 5.79% ஆக இருந்தது.
இதே செயல்படாத சொத்துக்களின் மதிப்பானது 13.91 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 16.50 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே மோசமான கடன்களுக்கான ஒதுக்கீடு இந்த ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டு வரையில் 766.62 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 1,873.28 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பிற்கும் மத்தியிலும் இவ்வங்கி லாபம் கண்டுள்ளது உண்மையில் வரவேற்கதக்க விஷயம் தான். ஏனெனில் வட்டி வருவாயானது அதிகரிக்காவிட்டாலும், மற்ற வருவாய் அதிகரித்ததன் மூலம் வங்கி லாபம் கண்டுள்ளது.
மூன்று மடங்கு லாபம் அதிகரித்துள்ள நிலையில், அதன் பங்கு விலையானது 2.8 சதவீதம் அதிகரித்து, 48.45 ரூபாயாக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications