உலக நாடுகளில் பல மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்து பொருளாதாரத்தை ஊக்குவித்து வரும் நிலையில், ஜப்பான் மத்திய வங்கியான Bank of Japan இன்று தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இது முதலீட்டு சந்தைக்கு மிகவும் முக்கியமானதாக விளங்கிறது.
பேங்க் ஆப் ஜப்பான் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அந்நாட்டின் குறுகிய கால வட்டி விகிதத்தை 0.5 சதவீதத்தில் இருந்து 0.75 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ள. இது 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வு என்பது தான் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

இந்த வட்டி விகித உயர்வு முடிவு ஜப்பான் நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் நாட்டில் நீண்டகாலமாக பணவீக்கம் இல்லாமல் பணவாட்டம் நிலை (deflation) சந்தித்து வந்தது. இப்போது பணவீக்கம் 2 சதவீத இலக்கை நிலையாக அடையும் என்ற நம்பிக்கையில் இந்த வட்டி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜப்பான் பல ஆண்டுகளாக மிகக் குறைந்த வட்டி விகிதம் மற்றும் பெரிய அளவில் பண ஆதரவு திட்டங்களை கொண்டு இயங்கி வந்தது. 1995இல் அந்நாட்டின் சொத்து விலை குமிழி வெடித்த பிறகு பணவீக்கம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதை சமாளிக்க வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட பூஜ்ய அளவுக்கு வைத்திருந்தது. இப்போது ஊதிய உயர்வு, பொருளாதார மீட்சி ஆகியவை பணவீக்கத்தை 2 சதவீத இலக்குக்கு கொண்டு வந்துள்ளன. இதனால் அந்நாட்டின் வங்கி மற்றும் நிதிதுறை இயல்பு நிலைக்கு (normalisation) திரும்புகிறது. இன்றைய வட்டி உயர்வும் ஒருமனதாக எடுக்கப்பட்டது.
உலக வங்கிகள்
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், இந்திய ரிசர்வ் வங்கி போன்றவை வட்டி விகிதத்தை குறைத்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. ஆனால் ஜப்பான் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது ஏன்? ஜப்பான் நாட்டில் இதுநாள் வரையில் பணவாட்ட நிலை மட்டுமே இருந்தது. ஆனால் சமீபகாலமாக டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம், ஜப்பான் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பணவீக்கம் அதிகரிக்க துவங்கியது.
இதனால் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர பேங்க் ஆப் ஜப்பான் இத்தகைய வட்டி உயர்வு மூலம் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்துகிறது. அடுத்த ஆண்டுக்கும் வட்டி உயர்வு தொடரும் என்று வங்கி சிக்னல் கொடுத்துள்ளது.
இந்த உயர்வு ஜப்பானின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரும். நீண்டகால குறைந்த வட்டி கொள்கை முடிவுக்கு வருகிறது. இது வங்கிகளின் லாபத்தை உயர்த்தும். பொதுமக்களுக்கு கடன் வட்டி உயரும். ஆனால் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால் பொருளாதாரம் நிலையாக வளரும்.
யென் கேரி டிரேடு என்றால் என்ன?
யென் கேரி டிரேடு என்பது ஒரு முதலீட்டு உத்தி. காலம் காலமாக ஜப்பான் வட்டி விகிதம் மிகக் குறைவாக இருப்பதால், முதலீட்டாளர்கள் ஜப்பான் யென் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதை அதை வேறு நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிக லாபம் தரும் சொத்துகளான பங்குகள், அரசு பத்திரங்கள், கிரிப்டோ-களில் முதலீடு செய்து வருகின்றனர்.
குறைவான வட்டியில் கடன் கிடைக்கும் காரணத்தால் டாலராக மாற்றி முதலீடு செய்து வரி செலுத்திய பின்பும் 8-10 சதவீதம் வரையில் லாபத்தை பெற்று வந்தனர். இது பல ஆண்டுகளாக பிரபலமாக இருந்தது, தற்போது வட்டி விகிதம் உயரும் காரணத்தால் இந்த நிலை மாறும், முதலீடுகள் உலக சந்தையில் இருந்து வெளியேறும். இதனால் பங்குகள், அரசு பத்திரங்கள், கிரிப்டோ சந்தையில் தடுமாற்றம் ஏற்படலாம்.
கேரி டிரேடுக்கு என்ன நடக்கும்?
வட்டி உயர்வால் யென் கடன் வாங்குவது விலையுயர்ந்ததாக மாறும். முதலீட்டாளர்கள் கடனை திரும்ப செலுத்தி முதலீட்டை விற்க வேண்டியிருக்கும். இது கேரி டிரேடு அன்வைண்ட் (unwind) என்று அழைக்கப்படுகிறது. இது உலகளாவிய சந்தையில் ஏற்ற இறக்கத்தை உருவாக்கும். 2024இல் இதுபோல நடந்தபோது பங்குச் சந்தை பெரிய சரிவு கண்டது மறக்க முடியாது.
இந்திய சந்தைக்கு பாதிப்பா..?
யென் கேரி டிரேடு மூலம் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு என்பது மிகவும் குறைவு தான், ஆனால் அமெரிக்க சந்தையில் ஏற்படும் சரிவு மூலம் இந்திய சந்தைக்கு மறைமுக பாதிப்பு ஏற்படும், இதனால் அடுத்த வாரத்தில் முதலீட்டு சந்தையில் சில தடுமாற்றம் வர வாய்ப்புகள் அதிகம்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications