நாட்டிலுள்ள ஒவ்வொருவருமே தங்களுக்கென்று ஒரு வங்கி கணக்கை வைத்திருக்கின்றனர். அதில் சிலர் நகை அடமானம் வைப்பது, லோன் பெறுவது, பிக்சட் டெபாசிட் கணக்கு தொடங்குவது என தங்களுடைய பண பரிவர்த்தனைகளை நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கி திவால் ஆகினாலோ அல்லது ஏதேனும் காரணத்திற்காக மூடப்பட்டாலோ உங்கள் பணம் என்னவாகும் என்று யோசித்திருக்கிறீர்களா? இந்த பதிவில் ஒரு வங்கி திவால் ஆனால் எவ்வளவு பணம் கிடைக்கும்? என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.
நாட்டில் தோராயமாக 97619 வங்கிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான வங்கிகள், அதாவது 96000 கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 1485 வங்கிகள் நகர்ப்புற அரசு வங்கிகள். இந்த வங்கிகளைத் தவிர நாட்டில் 12 பொதுத்துறை வங்கிகள், 22 தனியாத் துறை வங்கிகள், 44 வெளிநாட்டு வங்கிகள் என 56-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன.

ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கள் பிக்சட் டெபாசிட்களை முன்னணி வங்கிகளில் வைக்கின்றனர். குறிப்பாக அரசு வங்கிகளில் வைக்க விரும்புகின்றனர். நாட்டின் மிகப்பெரிய வங்கி என்று வரும்போது HDFC பேங்க், ICICI பேங்க் மற்றும் நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான SBI பேங்க் முன்னிலை வகிக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைவருக்குமே சொந்த வங்கி கணக்கு இருக்கிறது. மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கிகளில் தான் வைத்திருக்கின்றனர். இந்த டெபாசிட்களுக்கு வங்கிகள் வட்டியும் வழங்குகிறது. வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு விட்டால் மக்கள் கவலையின்றி இருப்பர். ஆனால் பலருக்கும் ஒரு வங்கி திவால் ஆனால் எவ்வளவு பணம் கிடைக்கும்?, பெரிய வங்கிகளில் பணத்தை வைத்து இருந்தால் அதிக பணம் கிடைக்குமா? சிறிய வங்கிகள் திவால் ஆனால் அதற்கு முதலீட்டாளர்களுக்கு குறைவான பணம் கிடைக்குமா? என்று பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகிறது. அது குறித்த விவரங்களை பார்ப்போம்.
ஒரு வங்கி எப்போது திவாலாகும்?: ஒரு வங்கியின் கடன்கள் அதிகரித்து நிதி நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அந்த வங்கி திவால் ஆனதாக கருதப்படும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் வங்கியின் வருவாய் அதன் செலவுகளை விட மிகக் குறைவாக இருந்து, தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே சந்தித்தால் அந்த வங்கியை அதிகாரிகள் மூட முடிவு செய்வார்கள். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் வங்கி அதன் சொத்துக்களை விட அதிக பொறுப்புகளுக்கு தள்ளப்பட்டு, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெற தொடங்குவார்கள். இதன் போது வங்கியின் நிதிநிலை மிகவும் மோசமடையும். இந்த சூழ்நிலைகளில் வங்கி திவாலானதாக அறிவிக்கப்படும்.
கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏதேனும் ஒரு காரணத்திற்காக மூடப்பட்டால் எவ்வளவு காப்பீடு கிடைக்கும்?: நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி மூடப்பட்டால் அல்லது திவாலானால் அதிகபட்சமாக உங்களுக்கு ரூ.5 லட்சம் வரை பணம் கிடைக்கும். ஒருவேளை உங்களிடம் அதைவிட அதிக தொகை இருந்தாலும் இதுதான் வரம்பு. கிட்டத்தட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் ஒரே மாதிரியானதாக இருக்கும். இந்தியாவில் இதற்கு முன்னர் இந்த வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது. ஆனால் 2020-ஆம் ஆண்டின் பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு பிறகு காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக மாற்றியமைக்கப்பட்டது.
ஒரே பெயரில் வெவ்வேறு வங்கி கிளையில் கணக்கு வைத்திருந்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?: நீங்கள் ஒரே பெயரில், ஒரே வங்கியின் வெவ்வேறு கிளைகளில் கணக்கு வைத்திருந்தால் அனைத்தையும் சேர்த்து 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். நீங்கள் இதற்கும் அதிகமான அமௌன்ட் டெபாசிட் செய்திருந்தாலும் ரூ. 5 லட்சம் தான் வரம்பு அப்படியானால் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒரு வேலை நீங்கள் திவாலான வங்கியில் பிக்சட் டெபாசிட் கணக்கு வைத்திருக்கிறீர்கள். ஆனால் அதில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் நீங்கள் டெபாசிட் செய்த தொகை உங்களுக்கு திருப்பி வழங்கப்படும். ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக டெபாசிட் செய்திருந்தாலும் ரூ.5 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications