இந்த 5 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்.. எச்சரிக்கையா இருங்க..!

டெல்லி: மார்ச் இரண்டாவது வாரத்தில் நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்தவிருப்பதால் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவெனில் மார்ச் 11 -13 வரை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் என்றும் கூறியிருக்கும் நிலையில், மார்ச் 11 அன்று புதன்கிழமை என்பதால், மார்ச் 13 அன்று வெள்ளிக்கிழமை. இதே மார்ச் 14 அன்று இரண்டாவது சனிக்கிழமையாகும். மார்ச் 15 ஞாயிற்றுகிழமை என்பதால் அன்றும் விடுமுறை.

ஆக மொத்தம் மார்ச் இரண்டாவது வாரத்தில் 5 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கலாம் என்பதால், வங்கி சேவைகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்

தொடர்

அதிலும் சில மாநிலங்களில் மார்ச் 9 அன்று ஹோலி என்பதால், அன்றும் கூட சில இடங்களில் வங்கி சேவை பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆக இதற்கு தகுந்தாற்போல் மக்கள் தங்கள் வங்கி சார்ந்த வேலைகளை நடப்பு வாரத்தில் முன்னரே முடித்துக் கொள்ளலாம். அல்லது விடுமுறைக்கு ஏற்றாற்போல் தள்ளி வைத்துக் கொள்ளலாம்.

பாதிப்பு தான் என்ன?

பாதிப்பு தான் என்ன?

சரி எதற்காக அடிக்கடி இப்படி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். கடந்த மாதமே நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போதே பல ஆயிரம் மதிப்புள்ள காசோலைகள் தேங்கியதாக செய்திகள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் திட்டமிட்டபடி இந்த ஸ்டிரைக் நடக்குமா? அப்படி நடந்தால் எந்த மாதிரியான பாதிப்புகள் வர வாய்ப்பிருக்கிறது வாருங்கள் பார்க்கலாம்.

பல கோரிக்கைகளை முன் வைத்து ஆர்பாட்டம்

பல கோரிக்கைகளை முன் வைத்து ஆர்பாட்டம்

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வரத்தில் 5 நாட்கள் வேலை என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஏற்கனவே கடந்த மாதத்திம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர், மேலும் கடந்த பிப்ரவரி 1 அன்றும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அந்த நாளில் கூட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐந்து நாட்கள் முடங்கலாம்

ஐந்து நாட்கள் முடங்கலாம்

குறிப்பாக பொதுத்துறை வங்கி ஊழியர்களின் பல சங்கங்கள் இந்த போராட்ட களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதனால் இந்தியா முழுவதிலும், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் சேவைகள் ஐந்து நாட்கள் வரை முடங்கலாம் என்றும், இதே சில மா நிலங்களில் ஹோலி தினம் அன்றும் பாதிக்கப்படுவதால் மார்ச் 10 அன்று மட்டும் வங்கிகள் வழக்கம் போல செயல்படலாம் என்றும், மற்ற நாட்கள் வங்கி சேவைகள் பாதிகப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கோரிக்கை தான் என்ன?

கோரிக்கை தான் என்ன?

இந்த பொதுத்துறை வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கையே நவம்பர் 2017 முதல் சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேன்டும் என்பது தான். அதிலும் வங்கி தொழில் சங்கங்கள் 20% ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில், வங்கி நிர்வாகம் 12.5% மேல் செல்ல வாய்ப்பில்லை என்றும், சிறப்பு ஊதியத்தினை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல், புதிய ஓய்வூதிய திட்டத்தினை நீக்குதல் போன்றவை பிற கோரிக்கைகள் இதில் அடங்கும். கோரிக்கைகள் நிறைவேறுமா, போராட்டம் கைகொடுக்குமா, பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

சமாதானம் இல்லை

சமாதானம் இல்லை

முன்னதாக தொழிலாளர் துறை மற்றும் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக தொழிற்சங்கங்களை சமாதானப்படுத்த முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியுற்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து AIBEA சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஐபிஏ விரும்பியது. ஆனால் வங்கி நிர்வாக தரப்பில் இது குறித்து எந்த உறுதிப்பாடும் இல்லாததால் இந்த போராட்டம் நிச்சயம் நடைபெறும் என்றும் கருத்தப்படுகிறது.

மாவட்ட ரீதியாக கூட்டம்

மாவட்ட ரீதியாக கூட்டம்

இந்த நிலையில் தற்போது மீண்டும் மார்ச் மாதத்தில் நிச்சயம் இந்த போராட்டம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. எனினும் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி ஊழியர்களுடன் கலந்துறையாடலில் ஈடுபடுவார் என்றும். இது ஒவ்வொரு மாவட்ட ரீதியாக நடைபெறும் கூறியிருந்தார். இதன் மூலம் வங்கி ஊழியர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படுமா? போராட்டம் கைகொடுக்குமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+