இந்த மாதம் சம்பளம் வருவதில் சிக்கல்? - செப்.28 முதல் 30 வரை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..

நாடு முழுவதும் வரும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இது சம்பளம் போடப்படும் தேதிகள் என்பதால் உரிய தேதியில் சம்பளம் வருமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் அமைப்பின் அறிவிப்புப்படி, செப்டம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாட்களுக்கு நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த மூன்று நாள் போராட்டத்திற்கு முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 26 முதல் 30 வரை என தொடர்ந்து 5 நாட்கள் வங்கி சேவைகள் கிடைக்காது.

இந்த மாதம் சம்பளம் வருவதில் சிக்கல்? - செப்.28 முதல் 30 வரை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..

மாத இறுதி நாள்களில் வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது. இதனால் சம்பளம் வரவு வைக்கப்படுவது, காசோலைகளை தீர்வு செய்வது மற்றும் பல்வேறு முக்கிய பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்படலாம். அது மட்டுமில்லாமல் இது வங்கித்துறையின் அரையாண்டு கணக்கு முடிக்கும் காலம்.

முன்னதாக வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் முயற்சியாக, தலைமை தொழிலாளர் ஆணையர் வங்கி சங்க தலைவர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இருந்தாலும் வங்கி சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்த திட்டங்களில் உறுதியாக உள்ளன. இன்றைய கூட்டத்தின் முடிவை பொறுத்து முடிவுகள் மாறலாம் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சகம் திங்கட்கிழமை அன்று ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தியது. நிதி சேவைகள் துறையின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வாடிக்கையாளர் சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்கள் மற்றும் வங்கிகளின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Also Read

வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை முறை அமல்படுத்தப்பட வேண்டும், அதாவது அனைத்து வாரங்களீலும் சனிக்கிழமை அன்று விடுமுறை வழங்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த வங்கியின் செயல்பாட்டின் அடிப்படையில் சீரான ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும். ஓய்வூதிய பலன்கள் மேம்படுத்தப்பட்டு, உடனுக்குடன் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

Recommended For You

வங்கி ஊழியர்கள் ஏற்கனவே கடந்த செப்டம்பர் 11ஆம் தேதியன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மாத இறுதி நாட்களில் வேலை நிறுத்த போராட்டம் நடப்பதால் கோடிக்கணக்கான ஊழியர்கள் தங்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வந்துவிடுமா என்ற அச்சத்தில் உள்ளனர். ஆனால் அதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஏனெனில் பெரும்பாலான நிறுவனங்கள் டிஜிட்டல் முறையில் தான் சம்பளம் கிரெடிட் நடைமுறைகளை கையாளுகின்றன. இந்த ஸ்டிரைக்கால் டிஜிட்டல் வங்கி சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்பதால் உங்கள் நிறுவனம் டிஜிட்டல் முறையில் சம்பள கிரெடிட்டை கையாண்டால் சிக்கல் இல்லை. உரிய தேதியில் சம்பளம் வந்துவிடும். ஒரு வேளை நேரடியாக வங்கிக்கு சென்று பணத்தை போட்டு அதில் இருந்து சம்பளம் வருகிறது என்றால் சிக்கல் ஏற்படலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+