வங்கி கணக்குகளில் இந்த தொகைக்கு மேல் டெபாசிட் செய்யாதீர்கள்.. மீறினால் எக்கச்சக்க அபராதம்தான்..!!

ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்குகளில் ரொக்க வைப்புத்தொகை ஐடி விதிமுறைகளின் வரம்பை மீறக்கூடாது. குறிப்பிட்ட வரம்பை மீறினால், வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வர வாய்ப்பு உள்ளது. நாட்டில் சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் சில விஷயங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக, ஒரு நிதியாண்டில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம், எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வருமான வரிச் சட்டத்தின் விதிகளின்படி, ஒரு தனிநபரின் சேமிப்புக் கணக்குகளில் ஒரே நிதியாண்டில் ரூ. 10 லட்சத்தை தாண்டினால், ஐடி துறையின் கவனத்திற்கு வங்கிகள் எடுத்து செல்ல வேண்டும். மேலும் ரூ. 10 லட்சத்துக்கு மேல் இருந்தால் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

வங்கி கணக்குகளில் இந்த தொகைக்கு மேல் டெபாசிட் செய்யாதீர்கள்.. மீறினால் எக்கச்சக்க அபராதம்தான்..!!

இந்த விதி அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் பொருந்தும். முழு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) ஒரு குறிப்பிட்ட வரம்பு ரூ. 10 லட்சத்துக்கு மேல் பணம் வைத்திருப்பவர்களின் விவரங்களை வங்கிகள் வருமானவரி துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. உங்கள் பரிவர்த்தனைகளில் வரி துறைக்கு சந்தேகம் இருந்தால், அவர்கள் நோட்டீஸ் அனுப்புவார்கள். அப்போது பணம் எங்கிருந்து வந்தது என்ற விவரங்களை வெளியிட வேண்டும்.

எனவே சேமிப்பு கணக்கில் அதிக தொகையை டெபாசிட் செய்பவர்கள் வருமான ஆதாரங்களையும் காட்ட தயாராக இருக்க வேண்டும். இருப்பினும், இந்த விதிமுறை தனிப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நடப்புக் கணக்கு அல்லது வணிகக் கணக்குகளுக்கு வரம்பு அதிகமாக உள்ளது.

மேலும் ஒரு நபரிடம் இருந்து ஒரு நாளில் ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக எடுக்க வேண்டாம். இந்த ஏற்பாடு ஒரு நாள் அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு பொருந்தும். ஒரே நாளில் 2 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை இருந்தால், அதை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றலாம்.

வருமான வரிச் சட்டம், 1962 இன் பிரிவு 114B இன் படி, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட வரம்புகளைத் தாண்டிய பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை வருமான வரித் துறையின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஒரு நாள் ரூ. 50,000க்கு மேல் டெபாசிட் செய்ய விரும்பினால், பான் கார்டை இணைக்க வேண்டும்.

பான் கார்டு இல்லை என்றால் படிவம் 60/61ஐ சமர்ப்பிக்க வேண்டும். என்று Tax to Win இன் இணை நிறுவனர் மற்றும் CEO அபிஷேக் சோனி கூறினார். வருமான வரி சட்டத்தின் பிரிவு 269ST இன் படி, ஒரு நபர் மற்றொருவரிடம் 2 லட்சத்துக்கு மேல் கடன் வாங்காதீர்கள்.

நோட்டீஸ் வந்தால் என்ன செய்வது?: சேமிப்புக் கணக்குகளில் டெபாசிட் வரம்பான 10 லட்சத்தை தாண்டும் போது, வருமானவரி துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தால், உரிய ஆதாரங்களைக் காட்ட வேண்டும். பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இது தொடர்பான ஆவணங்கள், வங்கி அறிக்கைகள், பரம்பரை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு வரி ஆலோசகர்களை கலந்தாலோசிப்பது நல்லது. அதன்பிறகு கவலைப்படத் தேவையில்லை.

எனவே, சேமிப்புக் கணக்குகளில் வைப்புத்தொகை மற்றும் திரும்பப் பெறுதல் வரம்பை மீறாமல் இருப்பதை உறுதிசெய்தால், சாதாரண குடிமக்கள் எந்த சிரமத்தையும் சந்திக்க வேண்டியதில்லை. வரம்பு மீறப்பட்டால், வருமான ஆதாரங்கள் தொடர்பான ஆவணங்களைத் தயாரிக்க வேண்டும். இந்த விதிகள் பண டெபாசிட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு வரம்புகள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+