UFBU மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இடையேயான சமரச கூட்டத்திற்குப் பிறகு, ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் முதலில் திட்டமிடப்பட்ட இரண்டு நாள் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை இந்தியாவின் ஐக்கிய வங்கி சங்கங்களின் அமைப்பு (UFBU) ஒத்திவைத்துள்ளதாகச் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
வங்கி ஊழியர்கள் பல வருடங்களாக அவ்வப்போது போராட்டம் நடத்தி வரும் வேளையில், பட்ஜெட் அறிவிப்புக்கு முன்பு ஜனவரி 30, 31 ஆம் தேதிகளில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி கூட இக்காலகட்டத்தில் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது வங்கி ஊழியர்கள் அமைப்பு இந்தப் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.
UFBU அமைப்பு
யூனியன் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்கள் இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக எஸ்பிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இவ்விரு நாட்களில் வங்கிக் கிளைகளில் பணிகள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.
ஜனவரி 30 - 31
யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்கள் (UFBU) தனது கிளை அமைப்புகளுக்கு ஜனவரி 30 - 31 ஆகிய நாட்களில் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதன் மூலம் யுனைடெட் ஃபோரம் ஆ பேங்க் யூனியன்கள் (UFBU) அமைப்பின் கீழ் AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF மற்றும் INBOC ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதாகக் கூறப்பட்டது.
ஒத்திவைப்பு
இந்த நிலையில் UFBU மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இடையேயான சமரச கூட்டத்திற்குப் பிறகு, ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் முதலில் திட்டமிடப்பட்ட இரண்டு நாள் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை UFBU ஒத்திவைத்துள்ளதாகச் சனிக்கிழமை (இன்று) அறிவித்துள்ளது.
சி எச் வெங்கடாசலம்
இந்த நிலையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி எச் வெங்கடாசலம் கூறுகையில் ஐபிஏ ஜனவரி 31 அன்று தொழிற்சங்கங்களைச் சந்தித்து ஐந்து நாள் வங்கி சேவை, ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை விவாதிக்க ஒப்புக்கொண்டு உள்ளது.
தொழிற்சங்கங்களின் குடை
UFBU என்பது பல வங்கி தொழிற்சங்கங்களின் குடை அமைப்பாகும். இந்த அமைப்பு சந்திக்கும் பிற பிரச்சினைகளை, அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்களுடன் தனித்தனியாக விவாதம் செய்ய ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
முக்கியக் கோரிக்கை
தற்போது வங்கி ஊழியர்கள் அமைப்பு அமைப்பு ஐந்து நாள் வங்கிச் சேவை, ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய திருத்தம் குறித்த சாசனம் மீதான பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தி வருகிறது.
ஊழியர்கள் பற்றாக்குறை
இதேபோல் அனைத்து காலி பணியிடங்களிலும், வங்கி கிளைகளிலும் போதிய ஆட்சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது இப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications