நாளை முதல் 7 நாட்கள் விடுமுறை.. எந்தெந்த நகரங்களில் தெரியுமா?

அக்டோபர் மாதம் என்றாலே பல விழாக்கள் உண்டு. இதனால் பல விடுமுறை நாட்கள் உண்டு. குறிப்பாக துர்கா பூஜை, தசரா, தீபாவளி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என பல விழாக்காலம் உண்டு.

அக்டோபர் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விழாக்கால விடுமுறை உள்பட 21 நாட்கள் விடுமுறை உண்டு. இதில் பல விழாக்கால விடுமுறைகள் உண்டு.

தொடர்ந்து 7 நாட்கள் விடுமுறை

தொடர்ந்து 7 நாட்கள் விடுமுறை

அக்டோபர் 3 - திங்கட்கிழமை - துர்கா பூஜை (மகா அஷ்டமி) , இந்த நாளில் அகர்தலா, புபனேஷ்வர், குவகாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் விடுமுறையாகும்.

அக்டோபர் 4 - செவ்வாய்க்கிழமை- துர்கா பூஜை /தசரா, ஆயுதபூஜை, ஸ்ரீ மந்தா சங்கர் தேவா ஜன்மாஸ்தேவ். அகர்தலா, புபனேஷ்வர், சென்னை, காங்டாங், குவகாத்தி, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.


அக்டோபர் 5 - புதன் கிழமை - துர்கா பூஜை/தசரா (விஜய தசமி. ஸ்ரீ மந்தா சங்கர் தேவா ஜன்மாஸ்தேவ். இந்த நாளில் இம்பால் தவிர இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விடுமுறையாகும்.

அக்டோபர் 6 - வியாழக்கிழமை - துர்கா பூஜை (தாஸ்ஹெயின்) அன்று காங்டாங்கில் விடுமுறையாகும்.

அக்டோபர் 7 - வெள்ளிக்கிழமை - துர்கா பூஜை (தாஸ்ஹெயின்) - காங்டாங்கில் விடுமுறையாகும்.

அக்டோபர் 8 - இரண்டாவது சனிக்கிழமை/ மிலாது நபி நாளில் போபால், ஜம்மு, கொச்சி, ஸ்ரீ நகர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விடுமுறையாகும்.

அக்டோபர் 9 - ஞாயிற்றுக்கிழமை . இது பொது விடுமுறை நாளாகும்.

தமிழகத்தில் எத்தனை நாட்கள்?

தமிழகத்தில் எத்தனை நாட்கள்?

வரவிருக்கும் 7 நாட்களில் 4 நாட்கள் தமிழகத்தில் விடுமுறை நாட்களாக உள்ளன.

அக்டோபர் 4 - செவ்வாய்கிழமை - துர்கா பூஜை /தசரா, ஆயுதபூஜை, ஸ்ரீ மந்தா சங்கர் தேவா ஜன்மாஸ்தேவ்

அக்டோபர் 5 - புதன் கிழமை - துர்கா பூஜை/தசரா (விஜய தசமி. ஸ்ரீ மந்தா சங்கர் தேவா ஜன்மாஸ்தேவ்

அக்டோபர் 8 - இரண்டாவது சனிக்கிழமை/ மிலாது நபி

அக்டோபர் 9 - ஞாயிற்று கிழமை

திட்டமிட்டு செயல்படுங்கள்

திட்டமிட்டு செயல்படுங்கள்

நீங்கள் அடிக்கடி வங்கி பரிவர்த்தனை செய்யும் ஒரு வாடிக்கையாளராக இருப்பின், நிச்சயம் உங்களுக்கு இது பயனுள்ளதாகவே இருக்கும். ஏனெனில் தொடர்ச்சியான விடுமுறை நாட்களில் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம். ஆக முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

 பண தட்டுப்பாடு ஏற்படலாம்

பண தட்டுப்பாடு ஏற்படலாம்

மேற்கண்ட விடுமுறை கால கட்டத்தினை தெரிந்து வைத்துக் கொண்டால், அதற்கேற்ப மக்கள் செயல்படலாம். ஏனெனில் தொடர்ச்சியான விடுமுறைகளுக்கு மத்தியில், அந்த சமயத்தில் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் பயனாளர்கள் முன் எச்சரிக்கையாக உதவும்.

அலைச்சல் குறையலாம்

அலைச்சல் குறையலாம்

மேற்கண்ட விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் சற்று வேறுபடுவதால், அதற்கேற்ப செயல்படுவது நல்லது. வங்கிகள் பொதுவாக நம் பணத்தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அம்சமாகும். ஆக முன்கூட்டியே திட்டமிட்டு, செயல்பட்டால் தேவையற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+