டெல்லி: மக்கள் சிரமப்படாமல் வங்கி சேவைகளைச் செய்து கொள்ள, அனைத்து பொதுத் துறை வங்கிகளின் வேலை நேரத்தையும் மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க மாற்றம் செய்து இருக்கிறார்களாம். இந்த புதிய வேலை நேரம் இன்றில் இருந்து (நவம்பர் 01, 2019 வெள்ளிக்கிழமை) மகாராஷ்டிரம் முழுக்க அமலுக்கு வருகிறதாம். ஒவ்வொரு வங்கிக் கிளையும் அது அமைந்து இருக்கும் இடத்தைப் பொறுத்து தான் இந்த புதிய வேலை நேரத்தை நிர்ணயித்து இருக்கிறார்களாம்.
பொதுவாக வங்கி வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும் தான் இருக்கிறது. ஆனால் சில வங்கிகள் அல்லது சில வங்கிக் கிளைகள் தங்களுக்கு தோதான மற்ற சில வேலை நேரங்களைப் பின் பற்றிக் கொண்டு இருக்கிறார்களாம். இப்போது இந்த சீரற்ற வேலை நேரங்களை எல்லாம் மாற்றி, எல்லா பொதுத் துறை வங்கிகளுக்கும், புதிய வேலை நேரத்தை அறிவித்து இருக்கிறார்கள்.

குடியிருப்பு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுத் துறை வங்கிகள் செயல்படும். மாலை 3 மணி வரை மட்டுமே பொதுமக்கள் வங்கிச் சேவையை பயன்படுத்த முடியும்.
அதே போல வணிகப் பகுதிகளில், பொதுத் துறை வங்கிகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். மக்கள் பயன்பாடு மாலை 5 மணி வரை மட்டுமே.
இந்த இரண்டு பகுதிகளையும் சேராத பொது இடங்களில் இருக்கும் வங்கிக் கிளைகள், வழக்கம் போல, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். மக்கள் மாலை 4 மணி வரை வங்கிக் கிளைகளுக்குச் சென்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மூன்று வேலை நேர திட்டத்தை, இந்தியாவில் இருக்கும் அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கும் அமல்படுத்த இந்திய வங்கிகள் சங்கம் ஏற்கனவே அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மாநில வங்கி கமிட்டியை (State Level Bankers' Committee - SLBC) அனைத்து வங்கி தலைமை அதிகாரிகளிடமும் பேசி, மாநிலம் முழுக்க அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும், ஒருங்கிணைந்த வேலை நேரத்தை நிர்ணயிக்குமாறு சொல்லி இருக்கிறார்களாம். அதில் மகாராஷ்டிரா மாநிலம் தற்போது, முதல் மாநிலமாக தன் வங்கி வேலை நேரத்தை மாற்றி அமைத்து இருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் இனி புதிய வங்கி வேலை நேர மாற்றம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications