டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்தாலும் தேவைப்படும் நேரங்களில் ரொக்கமாகத்தான் பணம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்காக மக்கள் ஏடிஎம்-களை மக்கள் நாடுகின்றனர். முன்பெல்லாம் நீண்ட வரிசையில் நின்று வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் ஏடிஎம் மையங்கள் அவற்றை வெகுவாக குறைத்துள்ளன. வெளியூர்களில் இருப்பவர்களும் வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் தங்கள் பகுதிகளில் இருக்கும் ஏடிஎம் மையங்களின் மூலம் பணம் எடுக்கலாம்.
CDM மெஷின்கள் மூலம் பணம் டெபாசிட் செய்யலாம். சில நேரங்களில் ஏடிஎம் மையங்களுக்கு சென்று பணம் எடுக்க முயற்சிக்கும் போது பரிவர்த்தனை தோல்வி அடைந்து விடும். ஆனால் வங்கி கணக்கில் இருந்து மட்டும் பணம் கழிக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் பிறருக்கு பணம் அனுப்பினாலும் வங்கி கணக்கில் பணம் கழிக்கப்பட்டு பணத்தை பெறுபவருக்கு பணம் சென்றிருக்காது. வங்கியை பயன்படுத்தாமல் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு.

இதற்காகவே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளுக்கு கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது. ஒருவரின் பணப்பரிவர்த்தனை தோல்வி அடைந்து வங்கிக் கணக்கில் பணம் கழிக்கப்பட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வங்கி திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை என்றால் அந்த குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு வங்கி அபராதம் செலுத்த வேண்டும். பணப்பரிமாற்றம் தோல்வியில் முடிந்தால் கழிக்கப்பட்ட பணத்தை வங்கி தாமாகவே திருப்பி செலுத்தவில்லை என்றால் தினமும் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் TAT ரூல்: 2019-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அப்படி வெளியிடப்பட்டது தான் TAT ரூல். TAT ரூல் என்பது "டர்ன் அரவுண்ட் டைம்" என்று பொருள். அதாவது ஒரு வாடிக்கையாளர் பணப்பரிவர்த்தனை செய்கிறார், அப்போது பணம் மட்டும் டெபிட் செய்யப்பட்டுவிட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கி திருப்பி செலுத்தியாக வேண்டும். அதை மீறும் பட்சத்தில் அதற்கு வங்கிகள் அபராதம் செலுத்த வேண்டும். இந்த அபராதம் வங்கி எவ்வளவு நாள் பணத்தை திருப்பி தர தாமதம் செய்கிறதோ? அவ்வளவு நாட்களுக்கு கணக்கிடப்படும்.
அபராத தொகை எப்போது பெறப்படும்?: பரிவர்த்தனை தன்மையை பொறுத்து வங்கிகள் அபராதம் செலுத்தும். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத பரிவர்த்தனை தோல்விக்கு மட்டுமே வங்கி அபராதம் செலுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும். பரிவர்த்தனை தோல்வி நடந்து 5 நாட்களுக்குள் வங்கி அதைத் திருப்பித் தர வேண்டும். தவறினால் ஒரு நாளைக்கு 100 ரூபாய் என்ற வீதத்தில் வங்கிகள் அபராதம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications