உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான FTX வீழ்ச்சி அடைந்த பிறகு கிரிப்டோ குமிழி தாறுமாறாக வெடிக்கத் துவங்கியது.
FTX தளம் வீழ்ந்த நிலையில் அதன் முதலீட்டாளர்கள் தங்கள் டோக்கன்களை விற்பனை செய்து பணத்தைத் திரும்பப் பெறக் கூட முடியவில்லை என்பது வருத்தமான விஷயமாக உள்ளது.
கடந்த 48 மணிநேரத்தில் பல முன்னணி கிரிப்டோகரன்சிகள் வீழ்ச்சி அடைந்து, கிரிப்டோ சந்தையில் மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவிலான வீழ்ச்சியை எதிர்கொண்டு உள்ளது.
சாம் பேங்க்மேன்-ஃப்ரைட்
சாம் பேங்க்மேன்-ஃப்ரைட்-ன் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமான FTX அமெரிக்காவில் திவாலானதாக அறிவித்து bankruptcy அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என FTX வெள்ளிக்கிழமை அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
சிஇஓ பதவி
இதோடு 30 வயதான முன்னாள் கிரிப்டோ பில்லியனர் FTX இன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்துள்ளார், மேலும் ஜான் ஜே ரே III அவரது இடத்தைப் பெறுவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
FTX நிறுவனம்
FTX நிறுவனம் திவாலானது, FTX டோக்கன் அனைத்தும் மதிப்பற்றதாக மாறிவிட்டது என்றால் மிகையில்லை. கடந்த சில நாட்களில் FTX டோக்கன் மதிப்பு 98 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளது. Binance போன்ற பிற முக்கியக் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளங்கள் FTX-ஐ பெறுவதில் இருந்து பின்வாங்கின. இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு தொகை குறித்த அச்சத்தில் உள்ளனர்.
Binance உதவி
FTX நிறுவனம் திவால் ஆவதில் இருந்து தப்பிக்க அனைத்து வழிகளையும் தேடி வந்த நிலையில் இந்நிறுவனத்தின் நிறுவனர் சாம் அமெரிக்காவில் திவாலானதாக அறிவித்து அறிக்கை சமர்ப்பித்து உள்ளார்.
Binance இத்தளத்தைக் காப்பாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட போது இந்த முயற்சி தோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் FTX நிறுவனத்தைக் காப்பாற்ற தற்போது இருக்கும் ஓரே வழி புதிய முதலீடுகளைப் பெற வேண்டியது மட்டும் தான் என இருக்கும் நிலையில் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
CoinDesk தகவல்
கிரிப்டோ செய்தி இணையத்தளமான CoinDesk ஆனது FTX நிறுவனத்தின் நிறுவனரான பாங்க்மேன்-ஃப்ரைடின் கிரிப்டோ வர்த்தக நிறுவனமான FTX, அதன் நேட்டிவ் டோக்கன்களான FTT ஐ பெரிதும் சார்ந்து இருப்பதாக அலமேடா ரிசர்ச் அமைப்பின் FTX நிறுவனத்தின் இருப்பு நிலை ஆய்வுகளை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
FTT இருப்பு விற்பனை
இதைத் தொடர்ந்து Binance சிஇஓ Changpeng Zhao, FTX நிறுவனத்தின் நேட்டிவ் டோக்கன்களான FTT இருப்பைத் தற்போது கசிந்த தகவல் அடிப்படையில் விற்பனை செய்துள்ளதாக அறிவித்தது. அடுத்த இரண்டு நாளில் அதாவது நவம்பர் 7-8 தேதிகளில் மட்டும் FTT டோக்கன் விலை 72 சதவீதம் சரிந்தது. நவம்பர் 10 ஆம் தேதி FTX நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டு முதலீட்டாளர்களின் பணத்தை ப்ரீஸ் செய்யப்பட்டது.
9.4 பில்லியன் டாலர் தேவை
இந்த நிலையில் FTX நிறுவனத்தைக் காப்பாற்ற 9.4 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை எதிர்பார்ப்பதாக FTX நிறுவனத்தின் நிறுவனரான பாங்க்மேன்-ஃப்ரைடின் நவம்பர் 9ஆம் தேதி தெரிவித்தார்.
மேலும் பஹாமாஸின் செக்யூரிட்டி கமிஷன் இந்நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களையும் முடக்கப்பட்டு உள்ளது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
FTX கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்
2019 மே அன்று முன்னாள் வால் ஸ்ட்ரீட் வர்த்தகர் சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் மற்றும் முன்னாள் கூகுள் ஊழியர் கேரி வாங் ஆகியோர் FTX.COM என்ற கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளத்தை FTX நிறுவனத்தின் வாயிலாக நிறுவினர். 2021 அக்டோபர் மாதம் முதலீட்டை ஈர்க்கும் போது FTX நிறுவன சுமார் 25 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிட்காயின் விலை
காயின்டெஸ்க் தளத்தின் படி பிட்காயின் மதிப்பு இன்று 4.12 சதவீதம் சரிந்து 16.712 டாலருக்கும், எதிரியம் 4.41 சதவீதம் சரிந்து 1,230 டாலருக்கும், பினான்ஸ் காயின் 4.43 சதவீதம் சரிந்து 280.33 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications