6 மாதமாக ஒரு பைசா கூட சம்பளமாக கொடுக்கவில்லை.. திவாலான கோ பர்ஸட் நிறுவனத்தின் சி.இ.ஓ. ராஜினாமா

வாடியா குழுமத்துக்கு சொந்தமான தனியார் விமான சேவை நிறுவனமான கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்தது. இந்நிலையில் கடும் நிதி பற்றாக்குறை காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம், விமான நிலையங்களுக்கான கட்டணம் கூட செலுத்த முடியாமல் தடுமாறியது.

இதனையடுத்து கடந்த மே மாதத்தில் இந்நிறுவனம் தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு தானாக முன்வந்து மனு அளித்தது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நாங்கள செலுத்த வேண்டிய கடன் ரூ.6,521 கோடியாக உள்ளது என்று அதில் கோ பர்ஸ்ட் தெரிவித்து இருந்தது. இந்த சூழ்நிலையில், திவாலான கோ பர்ஸ்ட் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கவுசிக் கோனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

6 மாதமாக ஒரு பைசா கூட சம்பளமாக கொடுக்கவில்லை.. திவாலான கோ பர்ஸட் நிறுவனத்தின் சி.இ.ஓ. ராஜினாமா

கோ பர்ஸ்ட் நிறுவனம் மீண்டும் பறக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து வந்த கவுசிக் கோனா பதவியை ராஜினாமா செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடந்த மாதம் 30ம் தேதியன்று கோ பர்ஸ்ட் ஊழியருக்கு அனுப்பிய மெயிலில், கனத்த இதயத்துடன் நிறுவனத்துடன் இன்று எனது கடைசி நாள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

2020 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் ஒரு முறை கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்காக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. (முன்பு 2008 முதல் 2011 வரை இந்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர்) மேலும் எனது சிறந்த திறமைகளை வெளிப்படுத்த முயற்சித்தேன். எங்கள் பிரார்த்தனைகள் கேட்கப்பட்டு, நிறுவனம் மீண்டும் தொடங்கும் என்று நான் நம்புகிறேன். பிரார்த்தனை செய்கிறேன்.

அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்குவது மட்டுமல்லாமல், நிறுவனத்தின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவும் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன், ஆனால் வெற்றி பெறவில்லை. உங்கள் அனைவருக்கும் உங்கள் நிலுவை தொகை செலுத்தப்படுவதை நான் பார்க்க விரும்பினேன். ஆனால் என்னால் இனி தாங்க முடியாது. எனவே கனத்த இதயத்துடன் நான் வெளியேற முடிவு செய்துள்ளேன்.

அனைத்து செயல்பாடுகள் மற்றும் விமானங்களுக்கான விரிவான தணிக்கையை அவர்கள் நடத்திய பிறகு, விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு சிவில விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் அனுமதியை பெற விமான நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் உண்மையான அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். துரதிர்ஷ்டவசமாக பெரிய முயற்சிகள் இருந்தும் விஷயங்கள் நமக்கு சாதகமாக செயல்படவில்லை.

தீர்வு நிபுணர் (RP), கடன்தாரர்கள் குழு (CoC) மற்றும் வாடியா குழுமம் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பல கோரிக்கைகள் மற்றும் பிரதிநிதித்துவங்கள் இருந்தும் கிட்டத்தட்ட 6 மாதங்களாக சம்பளம் கூட எங்களுக்கு வழங்கப்படவில்லை. நிறுவனம் குறிப்பிடத்தக்க மதிப்பை கொண்டுள்ளது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தீர்மானம் நிபுணர் இதை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய எவரையும் கண்டுபிடிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை திவாலான கோ பர்ஸ்ட் விமான நிறுவனத்தில் கோனா உள்பட குறைந்தது 5 தலைமை நிர்வாக அதிகாரிகள் பணியாற்றி உள்ளனர். மற்றவர்கள் வினய் துபே, கார்னெலிஸ் வ்ரீஸ்விஜிக், வொல்ப்காங் ப்ரோக் ஸ்காயர் மற்றும் க்ரோஜியோ டி ரோனி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+