டிசம்பர் 2022 காலாண்டில் திவால் வழக்குகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் செயல்முறை மூலம் கடன் தொகையைத் திரும்ப மீட்டெடுப்பது இக்காலகட்டத்தில் மிகக் குறைவான அளவாக 23.45 சதவீதமாக இருந்தது என்று தரவுகள் கூறுகிறது.
திவால் மனுக்கள் அதாவது insolvency petitions எண்ணிக்கை செங்குத்தாக 25 சதவிகிதம் அதிகரித்தாலும், 2023 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு வரை ஒட்டுமொத்த கடன் மீட்பு விகிதம் வெறும் 30.4 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் 69.6 சதவிகித கடன் தொகையை மீட்க முடியாமல் உள்ளது.
கேர் ரேட்டிங்ஸ் நடத்திய சமீபத்திய திவால் வாரியமான IBBI-யின் பகுப்பாய்வின்படி, ஒட்டுமொத்த மீட்பு விகிதம் 2020 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 43 சதவீதத்திலிருந்தும், 2022 ஆம் நிதியாண்டில் 4வது காலாண்டில் 32.9 சதவீதத்திலிருந்தும் தற்போது டிசம்பர் காலாண்டில் கடன் மீட்பு தொகை அளவு 23.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கேர் ரேட்டிங்ஸ்
கேர் ரேட்டிங்ஸ் ஏஜென்சியின் மூத்த இயக்குனரான சஞ்சய் அகர்வால் கூறுகையில், பெரும்பாலான பெரிய கடன் தீர்மானங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டதாலும், தற்போது நிலுவையில் உள்ள கணிசமான எண்ணிக்கையிலான வழக்குகள் BIFR வழக்குகள் மற்றும் அல்லது உயர் தீர்வு காலம் தேவைப்படும் மற்றும் குறைந்த மீட்டெடுக்கக்கூடிய மதிப்புடன் இருக்கும் வழக்குகளாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
திவால் நிலை மற்றும் திவால் கோட்
2016 இல் திவால் நிலை மற்றும் திவால் கோட் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஒவ்வொரு காலாண்டிலும் திவால் செயல்முறைக்காக அனுமதிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதன் மூலம் கடன் தீர்வுக்காக IBC-ஐ பயனுள்ளதாக ஏற்றுக்கொள்ளப்படுவதைக் காட்டுகிறது.
திவால் வழக்குகள்
2021-2022 ஆம் நிதியாண்டின் கடைசிச் சில காலாண்டுகளில் திவால் வழக்குகள் குறைக்கப்பட்ட பிறகு 2023 ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் அதிகரித்த போதிலும், திவால் செயல்முறைக்கு அனுமதிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முந்தைய காலாண்டுகளை விடத் தொடர்ந்து குறைவாகவே உள்ளது.
6,200 வழக்குகள்
டிசம்பர் 2022 வரை 6,200 வழக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 2,692 நிதிக் கடன் வழங்குபவர்களாலும் (financial creditors), 3,133 செயல்பாட்டுக் கடனாளிகளாலும் (operational creditors) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கார்ப்பரேட் கடனாளிகளின் பங்கு தொடர்ந்து சிறிதளவாகவே உள்ளது.
துறை வாரியான பாதிப்பு
இந்த நிலையில் துறை வாரியாகப் பார்க்கும் போது உற்பத்தி துறையைப் பார்க்கும் போது அதிகப் பங்கீட்டை வைத்துள்ளது. சுமார் 39 சதவீத தொகை உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள், அமைப்புகள் கொடுக்கப்பட்ட கடன்களில் மீட்க முடியாமல் உள்ளது. இதைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறை 21 சதவீதம், கட்டுமானம் 11 சதவீதம், வர்த்தகத் துறை 10 சதவீதம்.
தீர்வுகள், விசாரணை
டிசம்பர் 2022 ஆம் ஆண்டில் 6199 வழக்கில் 10 சதவீதம் வழக்குகள் தீர்வுகளை எட்டியுள்ளது, இதேபோல் 32 சதவீதம் நடைமுறையில் விசாரணையில் உள்ளது, இது 35 சதவீதத்தில் இருந்து 32 சதவீதமாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications