கடந்த சில மாதங்களில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், பணம் தேவைப்பட்டால் பலர் தங்கக் கடன் வாங்கி வருகின்றனர். தங்கத்தை அடமானம் வைத்து வங்கிகளில் கடன் பெறுகின்றனர். இருப்பினும், தனிநபர் கடன் வட்டி விகிதங்களுடன் ஒப்பிடும்போது தங்கக் கடன் வட்டி விகிதம் மிகவும் குறைவு. இதனால், பெரும்பாலானோர் தங்கத்தின் மீதான கடன்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.
சில தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன.

அவற்றில் இந்தியன் வங்கியின் தங்கக் கடன் மற்றும் விவசாயக் கடன் 8.80 சதவீதமாக உள்ளது. தங்கக் கடன் மற்றும் உணவு மற்றும் விவசாய ஓவர் டிராஃப்ட் கடன் போன்றே ஆனால் வட்டி விகிதம் 9.25 சதவீதம் ஆக வழங்கப்படுகிறது.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில், யூனியன் கிரிஷி காமதேனு தங்கக் கடன், யூனியன் தங்கக் கடன்-விவசாயம், யூனியன் ஸ்வர்ணசக்தி கடன் திட்டம்-ரிட்டல், யூனியன் எம்எஸ்எம்இ தங்கக் கடன் வட்டி விகிதம் 9.95 சதவீதம் ஆக உள்ளது.மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் தனிநபர் தங்கக் கடனுக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது.
முன்னணி தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி தங்கக் கடனுக்கான வட்டி விகிதம் 17 சதவீதம் வரை உள்ளது. மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி தங்கக் கடனுக்கான வட்டி விகிதங்களை 9.30 சதவீதம் முதல் 17.88 சதவீதம் வரை வழங்குகிறது.இருப்பினும் ஐசிஐசிஐ வங்கியில் தங்கக் கடனுக்கான வட்டி விகிதம் 9.25 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை உள்ளது.
கனரா வங்கியில் தங்கக் கடனுக்கான வட்டி விகிதம் 9.25 சதவீதம் ஆக உள்ளது.இருப்பினும், முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் கோல்டோ லோன் வட்டி விகிதம் 10.90 சதவீதமாக உள்ளது.
பஜாஜ் ஃபின்சர்வின் தங்கக் கடன் விகிதங்கள் 9.50 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை இருக்கும். ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸில் தங்கக் கடன் வட்டி விகிதங்கள் மாதத்திற்கு 0.99 சதவீதத்திலிருந்து தொடங்குகின்றன.


Click it and Unblock the Notifications