டெபாசிட் வரத்து குறைவதால் வங்கிகளுக்கு புது சிக்கல்.. ஏன் இந்த நிலை..!

சென்னை: இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் பாரம்பரிய சேமிப்பு முறைகளில் இருந்து மாறி மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள், அஞ்சல் நிலைய திட்டங்கள் ஆகியவற்றின் பக்கம் திரும்பி உள்ளனர். இதற்கு காரணம் காலம் காலமாக நாம் வங்கிகளில் செய்து வரக்கூடிய டெபாசிட்களை விட இவை அதிக லாபத்தை தருகின்றன என்பதுதான் இதற்கு காரணம்.இதனால் வங்கிகளுக்கு தற்போது பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வங்கிகளை பொறுத்தவரை நாம் டெபாசிட் செய்யப்படும் பணத்தை கொண்டு வர்த்தகம் செய்து அதை தான் வீட்டுக்கடன், வாகன கடன் உள்ளிட்டவையாக வழங்குகிறது. இதில் கடன் வாங்கியவர்கள் செலுத்தும் வட்டி வங்கிகளுக்கு கிடைக்கும் லாபம்.

டெபாசிட் வரத்து குறைவதால் வங்கிகளுக்கு புது சிக்கல்.. ஏன் இந்த நிலை..!

அதே வேளையில் தங்களிடம் சேமிப்பு கணக்கில் உள்ள பணம், ஆர்டி முறையில் செய்யப்பட்ட டெபாசிட்கள் மற்றும் பிக்ஸட் டெபாசிட்டுகள் ஆகியவற்றுக்கு வங்கிகள் வட்டி வழங்க வேண்டி இருக்கிறது. ஆனால் தற்போது டெபாசிட் வரத்து குறைந்து இருப்பதோடு கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் வங்கிகள் பெரிய சிக்கலை சந்திக்கின்றன.

அதாவது நடப்பு நிதியாண்டில் கடன் வழங்கும் விகிதம் 15 - 16 சதவீதம் என வளர்ந்துள்ளது, ஆனால் டெபாசிட் விகிதம் 11 - 12 சதவீதமாகத் தான் இருக்கிறது. 2024 ஆம் நிதி ஆண்டில் கடன் வழங்கும் விகிதம் 19.3%, ஆனால் டெபாசிட்கள் விகிதம் 14% ஆக தான் இருந்தது.

வங்கி டெபாசிட் திட்டங்களை விட மற்ற முதலீட்டு கருவிகள் லாபம் தருவதாகவும் பணவீக்கத்துக்கு ஏற்ற வகையிலான ரிட்டர்ன்ஸை தருபவையாகவும் இருக்கின்றன.எனவே மக்கள் இவற்றை தவிர்த்து மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தை முதலீடுகள் ஆகியவற்றை நோக்கி செல்கின்றனர்.

மக்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க வங்கிகள் தங்களுடைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. டெபாசிட் வரத்து அதிகமாக இருந்தால் தான் கடன் வழங்கும் விகிதத்திற்கு ஏற்ப அதனை சமன் செய்ய முடியும்.

இதனிடையே மதிப்பீட்டு நிறுவனமான Crisil ஏற்கனவே உயர்த்தப்பட்ட டெபாசிட் விகிதங்களை வங்கிகள் மறு நிர்ணயம் செய்ய வேண்டும் , இதனால் வங்கிகளின் லாபம் குறையும் என கூறுகிறது. 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் தான் வட்டி விகிதம் என்பது 140 bps என உயர்த்தப்பட்டது .தற்போது அதனை 20 முதல் 30 bps வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணமாக நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியாவின் முன்னணி வங்கிகள் தங்களுடைய டெபாசிட் வட்டி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை இரண்டு முறை உயர்த்தியுள்ளன. குறிப்பாக பல்வேறு வங்கிகளும் 300 நாட்கள், 400 நாட்கள், 444 நாட்கள் என்ற அளவில் சிறப்பு டெபாசிட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. இந்த திட்டங்களில் 7% என வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

எஸ்பிஐ, இந்தியன் வங்கி என முன்னணி வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கணிசமான வட்டிக்கு புதிய டெபாசிட் திட்டங்களை அறிமுகம் செய்வதன் பின்னணியும் இது தான்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+